Ticker

6/recent/ticker-posts

ஹோட்டல் ஒன்றுக்காக விற்பனையாகும் லேக்ஹவுஸ் கட்டிடம்!


அரசாங்கத்தின் பிரதான அச்சு ஊடக நிறுவனமான லேக் ஹவுஸ் நிறுவனம் அமைந்துள்ள காணியையும் கட்டிடத்தையும் ஹோட்டல் வளாகத்திற்காக முதலீட்டாளர் ஒருவருக்கு விற்பனை செய்ய ஜனாதிபதியினால் வெகுஜன ஊடக அமைச்சுக்கு யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

தற்போது பாரிய நஷ்டத்தில் இயங்கும் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை மற்றும் கடனை செலுத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த யோசனையை முன்வைத்துள்ளதாக தேசிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

லேக்ஹவுஸ் நிறுவனத்தை கொழும்பில் வேறொரு இடத்தில் ஆரம்பிப்பது தொடா்பாகவும், அல்லது அந்த நிறுவனத்தை கலைத்து விடுவது தொடா்பாகவும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

பழமையான கட்டிடங்கள் சுற்றுலாவை மேம்படுத்த உதவும் என்ற காரணத்தால, இங்கு ஹோட்டல் வளாகம் ஒன்றை அமைப்பதே நோக்கம் என வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. 

லேக் ஹவுஸ் நிறுவனம் அமைந்துள்ள காணி தொண்ணூறு வருட குத்தகையின் கீழ் வழங்கப்பட்டுள்ளதுடன், குத்தகைக் காலமும் அடுத்த வருடத்துடன் நிறைவடையவுள்ளது. 

லேக் ஹவுஸ் நிறுவனத்தை நிறுவியவா் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தாத்தாவான டீ.ஆா். விஜயவர்தன ஆவாா்.   1972-1977 காலப்பிாிவில் சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராக இருந்த காலத்தில் லேக் ஹவுஸ் நிறுவனம் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது. 

Post a Comment

0 Comments