Ticker

6/recent/ticker-posts

பனையோலையால் தயாரிக்கப்பட்ட இடியப்ப தட்டுக்கள் பகிர்ந்தளிப்பு!


(பாறுக் ஷிஹான்)

இடியப்பத்தை குடிசை கைத்தொழிலாக மேற்கொள்ளும் தெரிவு செய்யப்பட்ட  பெண்களுக்கு பனையோலையினால் தயாரிக்கப்பட்ட இடியப்ப தட்டுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. 

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இடியப்பத்தை குடிசை கைத்தொழிலாக மேற்கொள்ளும் தெரிவு செய்யப்பட்ட  பெண்களுக்கு வியாழக்கிழமை(6)  லயன்ஸ் கிளப் நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடனும் பிரதேச தனவந்தர்களின் உதவியுடனும் இவை வழங்கப்பட்டன.

பிளாஸ்டிக் இடியப்ப தட்டுகளினால் பல்வேறு விதமான சுகாதார பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாகவும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போசனையான மற்றும் நஞ்சற்ற உணவு திட்டத்தின் கீழும் நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.எல்.எம்  ரயீஸினால்  இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ .எல். எம். றிபாஸ், கௌரவ அதிதியாக பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம். பி. ஏ. வாஜித்,  சிறப்பு அதிதிகளாக தொற்றா நோய்த் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி   எம். ஐ. எம். எஸ். இர்சாத், சுற்றுச்சூழல் மற்றும் தொழில் வான்மை பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் எம் .எஸ். எம். பௌசாத்,   அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும், சுகாதார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments