Ticker

6/recent/ticker-posts

ரஷ்ய ஜனாதிபதி புடினோடு மோதிய ஆயுதக்குழு தலைவா் விமான விபத்தில் பலி!


கடந்த புதன்கிழமை இடம்பெற்ற விமான விபத்தில் கொல்லப்பட்ட உடல்களின் மரபணு பகுப்பாய்வுக்குப் பிறகு வாக்னர் ஆயுதக் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் இறந்துவிட்டார் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணைக் குழு பாதிக்கப்பட்ட 10 பேரின் அடையாளங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், அவை விமானத்தின் பயணிகள் பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒத்ததாக இருப்பதாகவும் உறுதிபடுத்தியுள்ளது.

ப்ரிகோசின் பிரயாணம் செய்த தனியார் ஜெட் விமானம் ஆகஸ்ட் 23 அன்று மாஸ்கோவின் வடமேற்கில் விழுந்தில் அதில் பிரயாணம் செய்த ருந்த அனைவரையும் கொல்லப்பட்டனா்.

இறந்தவா்களில் வாக்னரின் ஆயதக்குழுவில் உள்ள பல மூத்த பிரமுகர்களும் அடங்குகின்றனர்.  இவா்கள் ப்ரிகோசினால் அமைக்கப்பட்ட ரஷ்ய கூலிப்படையின் முக்கிய அங்கத்தவா்களாகும். பிரிகோசினின் இந்த ஆயுதக் குழு  உக்ரைன், சிரியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் ரஷ்யாவுக்கு சாா்பாக இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. ரஷ்யாவின் பினாமி இராணுவமாக ப்ரிகோசினின் இந்த ஆயுதக்குழு செயற்பட்டு வந்தது.

அண்மையில் ப்ரிகோசின் ரஷ்ய ஆயுதப் படைகளுக்கு எதிராகவே ஒரு கிளர்ச்சியை வழிநடத்தினாா். தெற்கு நகரமான ரோஸ்டோவைக் கைப்பற்றி, மாஸ்கோவில் நோக்கி அணிவகுத்துச் சென்று புடினை அச்சுறுத்தினாா். இந்த சம்பவம் இடம்பெற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ப்ரிகோசினின் கிளா்ச்சியை "முதுகில் குத்துதல்" என்று விவரித்திருந்தார். இந்த விபத்தின் பின்னணியில்  ரஷ்ய பாதுகாப்புப் படையினர் இருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெற்று வருகிறது.

விபத்துக்கான காரணம் விமானத்தில் ஏற்பட்ட வெடிப்பு என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளதாகவும் ப்ரிகோசின் கொல்லப்படுவதற்கு இதுவே காரணமாக இருக்கலாம் என்றும் அமெரிக்க ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் ப்ரிகோசினை "திறமையான நபர்" என்று விவரித்ததோடு, அவர் "வாழ்க்கையில் கடுமையான தவறுகளை செய்தார்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments