Ticker

6/recent/ticker-posts

​தாய்ப்பால் புரைக்கேறியதால் 70 நாள்களே நிரம்பிய பெண் குழந்தை ஒன்று உயிரிழந்தது.


இன்று அதிகாலை 4 மணியளவில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை - ஊரிக்காட்டில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தவரூபன் தவஅரசி என்ற குழந்தையே இவ்வாறு மரணமானது. இரட்டைக் குழந்தைகளில் ஒருவருக்கு தாயார் முதலில் பால் கொடுத்து படுக்க வைத்துவிட்டு இரண்டாவது குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தார். 
அப்போது குழந்தை அசையாமல் இருந்ததைக் கண்டு உள்ளூர் வைத்தியர் ஒருவரிடம் குழந்தையைக் கொண்டு சென்றனர். அவர் குழந்தையை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார். அங்கு கொண்டு சென்ற போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறினர். மரண விசாரணையில் குழந்தைக்குப் பருக்கிய பால் புரைக்கேறியதாலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments