Ticker

6/recent/ticker-posts

இலங்கை வரும் 'யுவான்வேங் 5' சீன உளவுக் கப்பல்! கடும் சினத்தில் இந்தியா!


சீன உளவுக் கப்பலான (விஞ்ஞான ஆய்வுக் கப்பல்) 'யுவான்வாங் 5' இந்தியப் பெருங்கடலில் கணினி மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு  கண்காணிப்புக்காக எதிா்வரும் ஆகஸ்ட் 11ம் திகதி  ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவிருப்பதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, இந்தியா தனது தென் பிராந்தியத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இலங்கையில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலவும் சூழலை இலக்காகக் கொண்டு சீனாவுக்குச் சொந்தமான ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு இந்த சீனக் கப்பல் வரவிருப்பது இந்தியாவில் கடும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ‘தி எகனாமிக் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சீனக் கப்பல் ஆகஸ்ட் 17 ஆம் திகதி வரை 07 நாட்களுக்கு இலங்கை கடற்பரப்பில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வடமேற்குப் பகுதியில் கணினி மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு கண்காணிப்பு ஆகியவற்றை மையமாக வைத்து செயற்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள  இந்த உளவுக் கப்பல், செயற்கைக் கோள் தகவல்களை சேகரிப்பது தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 

2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவ்வாறானதொரு சீனக் கடற்படைக் கப்பல் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும். 2014ஆம் ஆண்டு கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் சீன நீர்மூழ்கிக் கப்பல் நங்கூரமிட்டது இந்தியாவையும் கோபப்படுத்தியது.

Post a Comment

0 Comments