Ticker

6/recent/ticker-posts

அம்பேவெல புகையிரத பாதை புனரமைப்பு பணி ஆரம்பம்


மண்சரிவினால் உடைந்துள்ள அம்பேவெல புகையிரத பாதையை புனரமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

கடந்த 26 திகதி காலை அம்பேவெல புகையிரத நிலைய பகுதியில் இரண்டு தண்டவாளங்களில் (100 அடி நீளமும் 60 அடி ஆழத்துக்கும்) மண்சரிவு ஏற்பட்டதால் கொழும்பு பதுளை பிரதான ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 

அம்பேவெல ரயில் பாதையின் சேதத்தினால் 20 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய மாகாண புகையிரத பொறியியலாளர் லசந்த குமார தெரிவிக்கின்றார். 

இப்பாதையை புனரமைப்பதற்கு 1000 கியூப் கருங்கற்கள் தேவைப்படும் என அவர் தெரிவித்தார். 

இதனை புனரமைப்பதற்கு புகையிரத நிலையத்தில் இருக்கின்ற 40 ஊழியர்கள் சேவையில் இருப்பதாகவும் இன்னும் 3 நாட்களில் 2 தண்டவாளங்களில் ஒரு தண்டவாளத்தை புனரமைக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்ததோடு பதுளையிலிருந்து கொழும்பு வரைக்கும் புகையிரத சேவைகள் இடம்பெறாலம் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். 

கடந்த 26 ம் திகதியிலிருந்து தங்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட புகையிரதங்கள் இன்று முதல் கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா வரை சேவையில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments