Ticker

6/recent/ticker-posts

ஜாமியா நளீமிய்யாஹ் பட்டதாரிகள் பொன்விழா ஒன்று கூடல்!


எதிர்வரும் ஜுலை மாதம் 2ஆம் 3ஆம் ஞாயிறு மற்றும் திங்கள் தினங்களில் ஜாமியாஹ் நளீமிய்யாஹ் வளாகத்தில் அதன் பழைய மாணவர் அமைப்பான ராபிததுந் நளீமிய்யீன் அங்கத்தவர்களின் ஒன்றுகூடல் இடம்பெ ற இருக்கி ன்றது. 

ஜாமியாஹ் நளீமிய்யாஹ் தனது ஐம்பது வருட கல்வி ப்பயணத்தை  நினைவு கூரும் பொன்விழாவை கடந்த 24 ஆம் திகதி பண்டாரநா யக்க ஞாபாகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தி ல் 11 ஆவது பட்டமளிப்பு வி ழாவுடன் பிரகடனம் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

பொன்விழா நிகழ்வுகளின் மற்றொரு பிரதான அங்கமாக நா ட்டின் பலபாகங்களி ல் இருந்தும் ஜாமியாஹ் நளீமிய்யாஹ் பட்டதா ரி கள், பழைய மாணவர்கள் கலாபீட வளாகத்தில் ஒன்று கூடுகின்றனர். இரண்டு நாட்கள் இடம் பெறும் ஒன்று கூடலில் பல தேசிய சமூக முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகளில் கலந்துரையாடல்கள் இடம் பெ றுவதோடு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் கலைகலாசா ர நிகழ்வுகளும் இடம் பெ ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இஸ்லா மி ய தஃவா ஹ் மற்றும் சமூக தே சி ய வா ழ்வி ல் தமது பணிகள் பங்களிப்புகள்; குறி ப்பாக வேற்றுமைகளுக்கு மத்தியிலும் இணக்கப்பாடுகளூடாக சமுக ஐக்கியத்தை கட்டி எழுப்புதல், கல்வி உயர்கல்வி எழுச்சிக்கு பங்காற்றல், பல்லின, பலமதகலாச்சா ர பன்மைச் சூழலில் சமா தான சகவாழ்வை மேம்படுத்தல், தே சி ய நலன்களுக்காக காத்திரமான பங்களிப்புக்களைச் செய்தல் போன்ற பிரதான எண்ணக்கருக்களில் கலந்துரையாடல்கள் இடம் பெறவுள்ளன. 

இரண்டாம் நாள் நிகழ்வுகளின் ஒரு அங்கமாக ராபிதா நளீமிய்யீன் பழைய மாணவர் அமைப்பினது 09 ஆவது பொதுக் குழுக் கூட்டம் இடம் பெறவுள்ளதோடு அடுத்த மூன்று வருடங்களிற்கான மத்திய செயற்குழுவும் பிராந்தியங்களிற்கான செயற்குழுக்களும் அவற்றி ற்கான பதவி தாங்குனர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர். 

அங்குரார்பண நிகழ்வின் பிரதம அதிதியாக ஜாமியாஹ் நளீமிய்யாஹ் நிறுவனத்தின் தலைவர் அல்ஹா ஜ் யாகூத் நளீம் அவர்கள் பிரதம அதிதியாகவும், கலாபீட முதல்வர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் கெளரவ அதிதியாகவும், தென்கிழக்கு பல்கலை க்கழக பேராசிரியர் அஹ்மத் மஸாஹிர் விஷேட உரை நிகழ்த்துவதற்கும் அழை க்கப் பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments