Ticker

6/recent/ticker-posts

அல் கைதா தலைவா் அய்மன் அல் சவாஹிரி கொல்லப்பட்டாா் !


ஆப்கானிஸ்தானில் நடாத்தப்பட்ட  ட்ரோன் தாக்குதலில் அல் காயிதா தலைவர் அய்மன் அல் சவாஹிரி கொல்லப்பட்டதாக அமொிக்க ஜனாதிபதி பைடன் அறிவித்துள்ளா்.

ஒசாமா பின் லாதீனின் மறைவிற்குப் பிறகு அல்-ஜவாஹிரி அல் கைதாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தாா். இவா் நீண்ட காலமாக தேடப்படும் நபராக இருந்தாா்.   

9/11 தாக்குதலுக்குப் பிறகு, அப்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்  தேடப்படும் 22 பயங்கரவாதிகளின் பட்டியலை வெளியிட்டார். பின்லேடனுக்கு அடுத்த படியாக அல்-ஜவாஹிரியும்  இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தாா். பின்லேடன் 2011 இல் அமெரிக்க சிறப்புப் படைகளால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார்.

அல்-ஜவாஹிரி ஒரு எகிப்திய பிரஜையாவார், கெய்ரோவின் கல்வி கற்று  மருத்துவரானார்.  

1981 இல் எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத் இந்த  படுகொலை செய்யப்பட்ட போது, ​​கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, சிறை வைக்கப்பட்ட  நூற்றுக்கணக்கானவர்களில் அல்-ஜவாஹிரியும் ஒருவர்.

1984 ல் சவாஹிாி எகிப்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடா்ந்து ஆப்கானிஸ்தானுக்கு குடிபெயர்ந்து, அல்கைதாவுடன் இணைந்து செயற்பட்டாா்.  




Post a Comment

0 Comments