Ticker

6/recent/ticker-posts

தாருஸ்ஸலாம் வித்தியாலயத்தில் நாளை அடிக்கல் நடும் வைபவம்

நல்லாட்சி அரசாங்கத்தின் 'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' திட்டத்தின் கீழ் கொழும்பு 10,  மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் புதிய நான்கு மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (வியாழக்கிழமை செப்டெம்பர் 01) காலை 8.30 மணியளவில் பாடசாலையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். கௌரவ அதிதிகளாக மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப் பிரிய, உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சர் பைஸர் முஸ்தபா, மேல்மாகாண கல்வி, கலை, கலாசார, தகவல் தொழிநுட்ப அமைச்சர் ரஞ்சித் சோமவங்ச மற்றும் கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன் மேல் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். 

தாருஸ்ஸலாம் வித்தியாலயத்தை 'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' திட்டத்திலிருந்து நீக்கி விடுவதற்கு இராஜாங்க அமைச்சர் பௌஸி, மேல் மாகாண சபை உறுப்பினர் நௌஸர் பௌஸி செரண்டிப் அமைப்பின் தலைவரும் ஹமீடியாஸ் நிறுவனத்தின் தலைவருமான பௌஸுல் ஹமீட் ஆகியோர் கடும் பிரியர்த்தனம் மேற்கொண்டிருந்தனர். எனினும் குறித்த பாடசாலை அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்திலிருந்து நீக்க முடியாது என கல்வியமைச்சு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மானின் முயற்சியில் நாளைய தினம் அடிக்கல் நடும் நிகழ்வு இடபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments