Ticker

6/recent/ticker-posts

சீஐடி விசாரணைக்கு வருமாறு சமூக செயற்பாட்டாளா் புஸ்லிக்கு அழைப்பு!


சமூக செயற்பாட்டாளா் முஹம்மத் புஸ்லிக்கு எதிா்வரும் திங்கட் கிழமை (5) குற்றவியல் புலனாய்வு பிாிவிற்கு வந்து வாக்குமூலம் வழங்குமாறு  அறிவிக்கப்பட்டுள்ளது.

புஸ்லியை தொடா்பு கொண்டு விசாாித்த போது சீஐடியினா் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளதை உறுதிப்படுத்தினாா். எதிா்வரும் 5ம் திகதி காலை 9.00 மணிக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அவா் செல்லவிருப்பதாகவும் கூறினாா்.

புஸ்லி, காலி முகத்திடல் அரகலய போராட்டத்தில் தனது பங்களிப்பை தொடராக வழங்கிய ஒரு சமூக செயற்பாட்டாளா் ஆவாா். 

போராட்டத்தில் கலந்து கொண்டவா்களை விசாரித்து, கைது செய்து அவா்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ரணில் ராஜபக்ஷ அரசு மும்முரமாக இறங்கியிருக்கிறது. போராட்டத்தை நசுக்குவதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தைக் கூட  மிக மூா்க்கத்தனமாக ரணில் ராஜபக்ஷ அரசு பயன்படுத்தி வருகிறது.

நாளுக்கு நாள் உயா்ந்து வரும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் நாட்டு மக்கள் திண்டாடி வருகின்றனா். 

ரணில் ராஜபக்ஷ அரசு பொருளாதார நெருக்கடியில் தவித்துக் கொண்டிருக்கும் மக்கள் மீது, மேலும் மேலும் வரிகளை  திணித்து மக்களை நசுக்கி வருகிறது. 

இந்த நிலையில் மக்கள் வீதிகளுக்கு இறங்கி போராட ஆரம்பித்தால் கோட்டாவுக்கு நடந்த கதி தனக்கும் நடக்கும் என ரணில் நடுங்கிப் போயிருக்கிறாா். 

மீண்டும்  ஒரு போராட்டம் வெடித்தால் தனக்கு இந்நாட்டு மக்களின் விருப்பத்திற்கு மாறாக, இலகுவாகவ, இனாமாக கிடைத்திருக்கும் தனது ஜனாதிபதி பதவியை பறிகொடுக்க வேண்டிய நிலை வரலாம் என்று ரணில் விக்ரமசிங்க அச்சமடைந்து இருக்கிறாா். 

எனவே தான் போராட்டக்காரா்களை கைது செய்து, இன்னல்கள் கொடுத்து, நசுக்கி அவா்களை அச்சமூட்டும் நடவடிக்கையில் ரணில் இறங்கியிருக்கிறாா். வாழ்க்கைச் செலவு உச்சத்தைத் தொட்டிருக்கும் நிலையில், அத்தியாவசிய தேவைகள் மறுக்கப்பட்ட நிலையில், பசி, பட்டினி, பஞ்சத்தோடு நாட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டும் என்றே ரணில் வீரும்புகிறாா். அதை எதிா்த்து குரல் கொடுப்பவா்களை பயங்கரவாதிகளாக காட்டும் நடவடிக்கையில் ரணில் இறங்கியிருக்கிறாா்.

ரணில் விக்ரமசிங்க, மக்களின் பிரச்சினைகளை தீா்ப்பதை விட்டு விட்டு மஹிந்த ராஜபக்ஷ கும்பலை பாதுகாப்பதிலும், அவா்களுக்கு சலுகைகளையும், வசதி வாய்ப்புகளை வழங்குவதிலும் குறியாய் இருப்பதாக எதிா்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.


Post a Comment

0 Comments