Ticker

6/recent/ticker-posts

சுமார் 400 பெட்ரோல் நிலையங்கள் மூடப்படும் நிலையில்...!


சுமார் 400 பெட்ரோல் நிலையங்கள் மூடப்படும் நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளதாக பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டண முறைமையே இதற்கு காரணம் என சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தேவைப்படுவதற்கு முந்தைய நாள் இரவு 9.30 மணிக்கு முன்னதாக எரிபொருள் “ஓடர்”களுக்கான பணம் செலுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு பணம் செலுத்துவது கடினம் என்றும் குறிப்பிடுகிறார்.

புதிய கட்டண முறையினால் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கவில்லை எனவும் இதன் காரணமாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகளும் உருவாகியுள்ளன.

இலங்கை ஐஓசி பெற்றோல் நிலையங்களிலும் இதேபோன்ற பணம் செலுத்தும் பொறிமுறை உள்ளது ஆனால் பணம் செலுத்துவதற்கு நள்ளிரவு வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக குமார் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments