Ticker

6/recent/ticker-posts

மீட்கப்பட்டது “டைட்டன்” நீர்மூழ்கி கப்பலின் சிதைவுகள்!


1912 ஆம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் கடலில் 3,800 மீ (12,500 அடி) ஆழத்தில் மூழ்கியிருக்கும்  புகழ்பெற்ற டைடானிக் கப்பலை பார்ப்பதற்காக சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த ஐந்து பேரும் ஜூன் 18 அன்று இறந்தனர்.

நேற்று இந்த டைட்டன் நீர் மூழ்கி கப்பலின் சிதைவுகள் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளன.  வெடித்த நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகள் புதன்கிழமை கனடாவின் சென். ஜான்ஸில் கரைக்கு கொண்டுவரப்பட்டன.

இடிபாடுகளுக்கு இடையே நீர்மூழ்கியின் தரையிறங்கும் சட்டமும் பின்புற உறையும் காணப்பட்டதாக அதிகாரிகள் கூறுவதோடு டைட்டன் சிதைவுளில் மனித எச்சங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

https://www.youtube.com/watch?v=IQvGBrND6SA


Post a Comment

0 Comments