Ticker

6/recent/ticker-posts

தாய்வானுக்கு 1.1 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத உதவி!


தாய்வானுக்கும் சீனாவுக்கும் இடையில் முறுகல் நிலை அதிகரித்து வரும் நிலையில், தாய்வானின் பாதுகாப்பை தொடர்ந்து மேம்படுத்துவதாக உறுதியளித்துள்ள அமெரிக்கா, தாய்வானுக்கு 1.1 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத உதவியை வழங்க முன்வந்தள்ளது. 

இதற்கான அறிவிப்பை நேற்று (2) வெள்ளிக்கிழமை அமொிக்கா அறிவித்தது.

அமொிக்க சபாநாயகா் நான்சி பெலோசி தாய்வானுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்தாா். அவாின் விஜயத்தை சீனா கடுமையாக எதிா்த்திருந்தது. அவாின் விஜயத்திற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு தாய்வானுக்கான இந்த ஆயுத உதவியை அமொிக்கா  அறிவித்துள்ளது, 

சீனா, தாய்வான் நாட்டுக்கு உரிமை கோரி வருகிறது. இதன் காரணமாக  பல தசாப்தங்களாக தாய்வானுக்கும் சீனாவுக்கும் இடையிலான முறுகல் நிலை நீடித்து வருகிறது.


Post a Comment

0 Comments