Ticker

6/recent/ticker-posts

INS Vikrant இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது விமானம் தாங்கி கப்பல்!


இந்தியா  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தனது முதலாவது  விமானம் தாங்கி கப்பலை நேற்று (2) வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது, இது முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலாகும். இந்த முன்னேற்ற நடவடிக்கை  வெளிநாட்டு ஆயுதங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் இந்தியாவின் முயற்சிகளில் ஒரு மைல்கல் என்று இந்தியா அறிவித்திருக்கிறது.  

இது, பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சீனாவின் இராணுவ ஆதிக்கத்தை எதிர்கொள்வதற்கான முன்னேற்ற நடவடிக்கை என்றும் இந்திய தரப்பால் கூறப்படுகிறது.

  • 1971 ம் ஆண்டு பங்களாதேஷ் சுதந்திரப் போரின் போது பாகிஸ்தானின் கடற்படைக்கு எதிரான முற்றுகையைச் செயல்படுத்திய Vikrant என்ற கப்பலின் பெயரே  இந்த போர்க்கப்பலுக்கும் சூட்டப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையில் ஏற்கெனவே ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் இருந்துள்ளது. இங்கிலாந்திடம் இருந்து வாங்கப்பட்ட இந்தக் கப்பல், இந்திய கடற்படையில் கடந்த 1961 முதல் 1997-ம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளது. 

ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற இந்தப் போர்க்கப்பல் 262 மீட்டர் நீளமும், 59 மீட்டர் உயரமும், 62 மீட்டர் அகலமும் கொண்டதாகும். இதன் மொத்த எடை 40,000 டன்கள்.  14 அடுக்குகள் கொண்ட இந்தக் கப்பலில் 2,300 அறைகள் உள்ளதாகவும், கடற்படை அதிகாரிகள், வீரர்கள் என 1,700 பேர் கப்பலில் இருப்பதற்கான வசதிகள் உள்ளதாகவும். 34 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை சுமந்து செல்லும் திறனை  கொண்டிருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய கடற்படைக் கப்பல்களில் ஒன்றாக கருதப்படும் ஐஎன்எஸ் விக்ராந்த் (INS Vikrant), 17 வருட கட்டுமானப் பணி மற்றும் சோதனைகளுக்குப் பிறகு  சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கிறது.

Post a Comment

0 Comments