Ticker

6/recent/ticker-posts

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் என ரோபோட் கணிப்பு

உலக கோப்பையை ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் என நியூசிலாந்து ரோபோட் கணித்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை நியூசிலாந்தின் கான்டர்பெரி பல்கலைக்கழகம் உருவாக்கிய ‘இக்ரம்’ என்ற ரோபோட் மூலம் ஆரூடம் நடத்தப்பட்டது. ரோபோட்டின் ஆரூடம் அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. 

வரிசையாக வைக்கப்பட்ட 14 நாடுகளின் கொடிகளையும் பார்வையிட்ட ரோபோட் இந்தியா, மேற்கு இந்திய தீவுகள், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளின் கொடிகளை எடுப்பது போன்று வந்து தவிர்த்து விட்டது. 

 இறுதியில் ஆப்கானிஸ்தான் உலக கோப்பையை வெல்லும் என்று அதற்குரிய கொடியை ரோபோட் தேர்வு செய்தது.

 முதல் முறையாக உலக கோப்பையில் விளையாட இருக்கும் கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பையை வெல்லும் என கணிக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

Post a Comment

0 Comments