Ticker

6/recent/ticker-posts

சிக்கல் மிகுந்த அரசாங்கம், எனினும், தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நிலை: அனுரகுமார திஸாநாயக்க

அரசாங்கம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று (10) நிட்டம்புவ பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது கருத்துத் தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது;சிரீ லங்கா சுதந்திரக் கட்சியில் 136 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் உள்ளனர்சிரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 136 உறுப்பினர்கள் இருக்கும் போது 60 உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் ரணில் விக்ரமசிங்க பிரதமராக உள்ளார்ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவுள்ளார்தொடர்ந்து இவ்வாறு செல்ல முடியாது. 100 நாள் திட்டத்தை முன்னெடுக்க நாம் முயற்சி செய்கின்றோம்இது சிக்கல் மிகுந்த அரசாங்கமாகும்இது தொடர்ந்து நீடிக்காதுஎனினும், இதனை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய காலமொன்று உள்ளது என்றார்.
அத்துடன்,  அரசியலமைப்பில் சில சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என குறிப்பிட்ட அவர்,  முதலில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

Post a Comment

0 Comments