Ticker

6/recent/ticker-posts

கள்ளவாக்கு, சதி முயற்சிகளுக்கு எந்த வகையிலும் சந்தர்ப்பமில்லை - தோ்தல் ஆணையாளா்

னாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரை தோற்கடிப்பதற்கான சதிமுயற்சி மற்றும் கள்ள வாக்களித்தல் என்பன இடம்பெறுவதற்கு எந்தவிதத்திலும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாதென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று உறுதியாக தெரிவித்தார்.

நுணுக்கமானதும் கிரமமானதுமான ஒழுங்கு முறையின் கீழ் வாக்கெடுப்பு முதல் பெறுபேறுகள் வெளிவரும் வரையிலான அனைத்து செயற்பாடுகளும் பலத்த கண்காணிப்புக்கு மத்தியில் ஒரே தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டிருப்பதனால் அங்கு சதி மற்றும் குளறுபடிகளை மேற்கொள்வதற்கான கால அவகாசம் இருக்காது எனவும் அவர் கூறினார்.


பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்தி முடித்தாலும், கள்ள வாக்களித்தல் உள்ளிட்ட ஏதோவொரு சதிமுயற்சி இடம்பெற்றிருப்பதாக அரசியல் கட்சி களும் மக்களும் சந்தேகங்கள் கொண்டு பார்ப்பதனை தவிர்க்க வேண்டுமெனவும் ஆணையாளர் கேட்டுக் கொண்டார்.

எந்தவொரு தேர்தலிலும் வெற்றி பெறுபவரை தோற்கடிக்க முடியாது. தோல்வியை எதிர்பார்த்திராத அல்லது தாங்கிக் கொள்ள முடியாதவர்களே சதி அல்லது அசம்பாவிதம் இடம்பெற்றிருக்க கூடுமென ஊகிக்கிறார்கள். எமது திட்டமிடப்பட்ட செயற்பாடுகளின் கீழ் அவை வெறும் மாயை மாத்திரமேயெனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதேவேளை தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரசாங்க உத்தியோகத்தர்கள் மீது முழு மனதுடன் நம்பிக்கை வையுங்கள். இவர்கள் இலங்கை குடியரசின் அரசாங்க சேவையாளர்களே தவிர எந்தவொரு அரசாங்கத்தினதும் தனிப்பட்ட சேவையாளர் களள்ளவெனவும் ஆணையாளர் தெரிவித்தார். தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே ஆணையாளர் மேற்கண்ட கருத்துக்களை முன்வைத்தார். அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது,
தேர்தல் பணிகளில் சுமார் மூன்று இலட்சம் அரசாங்க உத்தியோகத்தர்கள் கடமைக்கமர்த்தப்படுகின்றனர். இவர்களுள் வாக்களிப்பு நிலையம் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கான முக்கிய பொறுப்புக்கள் போட்டிப் பரீட்சை மூலம் அரசாங்க சேவையில் இணைந்துக் கொள்ளப்பட்ட சுமார் 15 வருட அனுபமிக்கவர்களுக்கே வழங்கப்படுகிறது.

இவர்கள் தமது திறமையடிப்படையில் அரசாங்க சேவையில் இணைந்துக் கொண்டவர்கள் மட்டுமன்றி எழுந்த மானமாகவே குறித்த நிலையங்களுக்கு கடமைகளுக்காக அனுப்பி வைக்கப்படுவர். இவர்கள் யாரையும் இதுவரையில் தோற்க டித்ததுமில்லை தோற்கடிப்பதுமில்லை. அதற்கான கால அவகாசமும் இதற்கு இல்லை. இவர்கள் ஒருவருக்கு கிடைத்த வாக்கை இன்னொருவருக்கு வழங்க மாட்டார்கள். மனசாட்சிக்கமைய வேலை செய்வதற்கு இவர்களை நாம் பழக்கப்படுத்தியுள்ளோம். எனவே அரசாங்க அதிகாரிகளுக்கூடாக அசம்பாவிதம் இடம்பெறலாம் என்ற சந்தேகத்தை விட்டு விடுங்கள்.
வாக்குப் பெட்டிகள் ஒரே மரத்தினால் உறுதியாக வடிவமைக்கப்பட்டவை. இதனை வாள் கொண்டு கூட ஒரு நாளில் அறுக்க முடியாது என்பதனை நான் உறுதியாக கூறுவேன். வாக்களிப்பு நிலையத்திற்கு எடுத்துவரப்படும் பெட்டிகளுக்குள் ஒன்றுமில்லை என்பதனை அதிகாரிகளும் வாக்காளர்களின் பிரதிநிதிகளும் பார்வையிட்டதன் பின்னரே வாக்கெடுப்பு ஆரம்பமாகும்.

வாக்குப் பெட்டிகள் முத்திரையிடப்பட்டு பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் அதிகாரியினால் வாக்கு எண்ணும் நிலையத்திற்கு எடுத்து வரப்படும். இதற்கு ரோந்து சேவையிலீடுபடும் பொலிஸார் பாதுகாப்பு வழங்குவர்.
வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமா வதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு முன்னரே வேட்பாளர்களின் அனுமதிக் கப்பட்ட பிரதிநிதிகள் குறித்த நிலையத்திற்கு வருகை தரமுடியும்.

வாக்குகள் எண்ணி முடிந்ததும் இறுதிப் பெறுபேறுகள் அனைத்து வேட்பாளர் பிரதிநிதிகளினதும் கையொப்பங்களுடன் என்னை வந்தடையும்.
இம்முறை கணனிமயப்படுத்தலுக்கான வேலைகளை கொழும்பு பல்கலைக் கழகத்தின் கணனிப் பிரிவே முன்னெடுக் கவுள்ளதனால் அரசியற் கட்சிகளும் பொது மக்களும் மாலை கலைந்து தேர்தல் மீதும் தேர்தல் பணிகளை முன்னெடுக்கும் அதிகாரிகள் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

Post a Comment

0 Comments