Ticker

6/recent/ticker-posts

சாய்ந்தமருது குண்டு வெடிப்பில் சாரா ஜெஸ்மின் இறந்தாராம்! பொலிஸாா் தகவல்!


2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று பல நாட்களுக்குப் பின்னர், சாய்ந்தமருதில் வீடொன்றில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி உயிரிழந்தவர்களில் சாரா ஜாஸ்மின் என அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரனும் அடங்குவதாக DNA பரிசோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கையின் மூலம் சிறிலங்கா காவல்துறை இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று சில நாட்களுக்குப் பின்னர், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி கல்முனை சாய்ந்தமருதில் வீடொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் சிறுவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.

சஹ்ரான் ஹாஷிமின் சகோதரர்களில் ஒருவரான முகமது ரில்வான் என்பவனே இந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.

அம்பாறை மயானத்தில் புதைக்கப்பட்ட எச்சங்களை தோண்டி எடுக்குமாறு 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி கல்முனை நீதவான் நீதிமன்றத்தினால் DNA மறுபரிசீலனைக்காக உத்தரவிடப்பட்டது.

நீதித்துறை வைத்திய அதிகாரிகள், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) மற்றும் அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவினரால் பெறப்பட்ட திசுக்களின் மாதிரிகளில் மூன்றாவது தடவையாகவும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலுள்ள தௌஹீத் அமைப்பொன்றின் அனுசரணையில் மதம் மாறிய  புலஸ்தினி மகேந்திரன், 2019 ஏப்ரல் 21 அன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பில் கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தீன் தேவாலயத்தை குறிவைத்து தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி ஹச்சி முஹம்மது  ஹஸ்துனின் மனைவி ஆவார். 

எனவே, குற்றம் நடந்த இடத்தில் இருந்து பெறப்பட்ட எலும்பு மாதிரிகளின் DNA  சாரா ஜெஸ்மின் என்ற புலஸ்தினி மகேந்திரனின் தாயார் ராஜரத்தினம் கவீதாவுடன் 99.999% பொருத்தமாக இருந்ததாக அரசாங்க பகுப்பாய்வு திணைக்கள அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments