Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி செயலகத்தின் 38 வாகனங்கள் மாயம்!


2018-2019-2020 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான கணக்காய்வு அறிக்கையில் ஜனாதிபதியின் செயலாளரின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட முப்பத்தெட்டு வாகனங்கள் ஜனாதிபதி செயலகம் அல்லது ஜனாதிபதி மாளிகையின் வசம் இல்லை என்றும், அவை  யாருக்கு வழங்கப்பட்டன என்பது பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. 

இதேவேளை, அந்த வாகனங்களை தேடுவதற்கு பொலிஸாரின் உதவி கோரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் கணக்காய்வாளர் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் என்ற பெயரில் மோட்டார் வாகனத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட மேலும் 47 வாகனங்கள் பல்வேறு நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் வழங்கப்பட்டு இன்னும் மீளப்பெறப்படவில்லை  என கணக்காய்வு அறிக்கை கூறுகிறது. 

இதில் 27 வாகனங்கள் பற்றிய தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய இருபது வாகனங்கள் தொடர்பில் கடந்த மார்ச் மாதம் வரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களுக்கு மேலதிகமாக மேலும் 14 வாகனங்கள் ஜனாதிபதி செயலகம் என்ற பெயரில் மோட்டார் வாகன திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் அவை ஜனாதிபதி செயலகத்தின் வசம் இல்லை என கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments