Ticker

6/recent/ticker-posts

இலங்கை வரும் சமந்தா பவா்!


சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவரகத்தின் (USAID) தலைவர் சமந்தா பவர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (10) இலங்கை வரவுள்ளார். 

சமந்தா பவர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசாங்கத் தலைவர்கள் பலருடன் சமந்தா பவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் கடன் வழங்கும் நாடாக அமெரிக்கா பங்கேற்கும் என கடந்த 7ஆம் திகதி அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜேனட் யெலன் அறிவித்திருந்த நிலையில்,  சமந்தா பவர் இலங்கைக்கான தனது விஜயத்தை மேற்கொள்கிறார்.

சமந்தா ஜேன் பவர் ஓா் அமெரிக்க பத்திரிகையாளர், இராஜதந்திரி மற்றும் மனித உாிமை செயற்பாட்டாளராவாா்.  அவர் தற்போது சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவரகத்தின் நிர்வாகியாக பணியாற்றுகிறார். அவர் இதற்கு முன்பு 2013 முதல் 2017 வரை ஐக்கிய நாடுகள் சபைக்கான 28 வது அமெரிக்க தூதராக பணியாற்றினார்.

Post a Comment

0 Comments