Ticker

6/recent/ticker-posts

பேஸ்புக் மற்றும் இணைய தள முடக்கத்தை நீக்க ஐ.நா கோரிக்கை!

இலங்கையில் சுதந்திரமாக இணையத்தளங்களுக்கு பிரவேசிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றுஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஸ்டெஃபன் டுஜாரிக், நியுயோர்க்கில் உள்ள ஐக்கியநாடுகளின் தலைமையகத்தில் நடைபெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனைக்குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் அரசியல்துறை பிரதானி ஜெஃப்ரி ஃபெல்ட்மன் தமது 3 நாட்களுக்கானவிஜயத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்திருந்தார்.
அவர் இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களுக்கான தடைகள் குறித்து அவதானம்செலுத்தினாரா? என்று செய்தியாளர்கள் ஐக்கிய நாடுகளின் பேச்சாளரிடம் கேள்விஎழுப்பினர்.
ஆனால் இதுகுறித்த விபரங்கள் தமக்கு கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட பேச்சாளர்,எனினும் இலங்கையில் அனைவருக்கும் இணையத்தள பாவனை சுதந்திரம் கிடைக்கப்பெற வேண்டும்என்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments