Ticker

6/recent/ticker-posts

எனது கடமையை செய்துவிட்டேன் ஆணைக்குழு தேர்தலை நடத்தவேண்டும்

அமைச்சர் பைஸர் முஸ்தபா 
(ந.ஜெகதீஸ்)
தேர்தல்களை மேலும் கால தாமதப்படுத்த முடியாத நிலைமை தோன்றியுள்ளது. இது தொடர்பிலான எனது கடமைகள் அனைத்தும் முடிந்துள்ளன. தேர்தல் திகதிகளை அறிவிக்கும் பொறுப்பு தேர்தல்கள் திணைக்களத்திடமே உள்ளது என  அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். 
உள்ளூராட்சிமன்ற எல்லை நிர்ணய செயற்பாடுகளின் போது பிரதேச சபைகளை அதிகரிக்க வேண்டும் என்ற சிறுபான்மை அரசியல் கட்சியகளிக் கோரிக்கைகள் தொடர்பில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு பின்னர் ஆராயப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாகாண சபைகள் மற்றம் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் தேர்தல்கள் தாமதப்படுத்தப்படுவதாக என்மீது பல குற்றச்சாட்டுக்கள் பல தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் எல்லை நிர்ணய செயற்பாடுகளில் குளறுபடிகளினாலயே கால தாமதம் ஏற்பட்டது. 
இந்நிலையில் தேர்தல்கள் எல்லை நிர்ணயத்தில் சிறுபான்மை கட்சிகளுக்கு பாதகமான சூழல் இருப்பதாக சிறுபான்மை கட்சிகள் சார்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. எல்லை நிர்ணய செயற்பாடுகளின் போது சிறுபான்மை கட்சிகளின் யோசனைகளும் பெறப்பட்டன.
அதன் அடிப்டையில் 900 யோசனைகள் அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றன. அவற்றில் பொருத்தமானவற்றை குறித்த எல்லை நிர்ணய செயற்பாடுகளின் போது முடியுமானவரையில் உள்ளீர்த்திருக்கின்றோம். தற்போது உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவதற்கான ஆவணங்கள் முழுமையாக தயாரிக்கப்பட்டு அவை பாராளுமன்றத்திலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
இது எமக்கு கிடைத்த வரலாற்றுபூர்வமான வெற்றியாகும். இந்த சட்டமூலத்தின் ஊடாக பெண்களின் பிரத்திநிதித்துவம் 25 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இரு முறைகளின் ஊடாக மகளிர் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடுகின்ற சுயேட்சை குழு ஒன்றிற்கு கடந்த காலங்களில் இருந்த சட்டங்கள் வாயிலாக 5000 ரூபாய் அறவிடப்பட்டது. புதிய சரத்தின் பிரகாரம் 20 ஆயிரம் ரூபாவாக மேற்படி தொகை அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பிரதான கட்சிகளிலிருந்து போட்டியிடும் வேட்பாளர்களுக்கு 1500 ரூபா முதல் 5000 ரூபாய் வரையில் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் 30 சதவீத இளைஞர்கள் கட்சிகளின் ஊடாக வேட்பாளர்களாக உள்வாங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனின் அக்கட்சிகள் முன்வைக்கும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும்.
சமூர்த்தி மற்றும் கிராம சேவையாளர்கள் தாம் பணியாற்றும் உள்ளூரரட்சி மன்றங்களின் வேட்பாளர்களாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியாது. அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொகுதிவாரி முறை மற்றும் விகிதாசார முறைமையை உள்வாங்கிய கலப்பு முறையின் கீழ் 60 க்கு 40 என் வீதத்தில் இடம்பெறும் என்றவாறான பல சரத்துக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் பூரணப்படுத்தப்படு நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் சிறுபான்மை கட்சிகளின் யோசனைகள் மேலதிகமாக முன்வைக்கப்படுகின்றன. எவ்வாறாயினும் தேர்தல்களை காலம் தாழ்த்த முடியாத நிலைமை காணப்படுவதால் சிறுபான்மை அரசியல் கட்சிகளின் நிலைமை குறித்து தேர்தலின் பின்னர் ஆராயப்படும்.
அதேநேரம் மாகாண சபை தேர்தல்களும் கலப்பு முறைமையிலேயே நடத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார். virakesari.lk

Post a Comment

0 Comments