Ticker

6/recent/ticker-posts

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை, பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க சட்டம்

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை, பாலியல் துஷ்பிரயோகங்கள், என்பவற்றை கட்டுப்படுத்த பல்கலைக்கழக கட்டமைப்பில் மாற்றத்தை கொண்டு வர சட்டத்தை உறுதி செய்யவேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கான சட்ட வரைபு தயாரிக்கப்பட்டு இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பல்கலைக்கழகங்களில் பகிடிவதை, பாலியல் மற்றும் பால்நிலை வன்முறைகளை தவிர்த்தல் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற உயர்மட்ட பேச்சில் கலந்துகொண்டு நேற்று வியாழக்கிழமை கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் சட்டம் சகலருக்கும் சமமான முறையில் பகிரப்படுகின்றது. இந்த சட்டதிட்டங்களுக்கு எதிராக செயற்படுவோர் அல்லது அதனை மீறுவோர் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காகவே பொலிஸார் உள்ளனர் என பிரதமர் கூறியுள்ளார்.
எனினும் இந்த செயற்பாடானது நாட்டில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படதில்லை. இதனாலே பகிடிவதைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள், மற்றும் பால்நிலை வன்முறைகள் என்பன அதிகரித்து செல்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments