Ticker

6/recent/ticker-posts

Facebook ஊடாக தன்னைப்பற்றி பொய் பிரசாரம் செய்கிறாா்களாம் - விமல் வீரவன்ச


Facebook உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் ஊடாக அரசாங்கத்தைத் தோற்கடித்த இளைய தலைமுறைக்கு முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச அறிவுரை வழங்கியுள்ளார். 

தற்போதைய அரசாங்கம் இளைய தலைமுறையின் அறியாமையைப் பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறிய விடயங்களைப் பெரிதாக்கி, பெரிய விடயங்களை இல்லாமல் செய்துகொள்வதற்கு இணைய பயனாளிகள் முற்படக்கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், தனது சிகை அலங்காரம் குறித்து பேசப்படுவதாகவும் ஆயிரக் கணக்கில் சிகை அலங்காரத்திற்குப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்மீது சேறுபூசுவதற்காகவே இவ்வாறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் தனக்கு ஒரு முறை முடிவெட்டுவதற்கு 1500 மட்டுமே செலவாகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 45,000 ரூபா பெறுமதியான ஆடை குறித்து கருத்து தெரிவித்துள்ள விமல் வீரவங்ச, அவ்வளவு விலைக்கு ஆடை இருக்கிறதா என்பது கூட தனக்குத் தெரியாது என்றுக் குறிப்பிட்டார்.
வெளிநாடு செல்லும் நண்பர்கள் அல்லது உறவினர்கள் தனது சட்டை அளவைக் கேட்டறிந்து தனக்கு ஆடைகளை வாங்கிவந்து அன்பளிப்புச் செய்வதாகவும், அவற்றின் விலைகளைத் தான் அறிந்துகொள்ள முற்படுவது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், தன் மனைவி மீது சுமத்தப்பட்டுள்ள போலி கடவுச் சீட்டுக் குற்றச்சாட்டும் உண்மைக்குப் புறம்பானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விமல் வீரவங்ச வழங்கிய செவ்வியை கீழேஉள்ள வீடியோவில் சிங்கள மொழியில் பார்க்கலாம்.

Post a Comment

0 Comments