Ticker

6/recent/ticker-posts

சல்மான்கானை வைத்துக் கொண்டு ஷாருக்கானுக்கு வாழ்த்து தொிவித்த அரசியல்வாதி

ரசியல் வட்டாரத்தில் கடும் விமா்சனத்திற்குள்ளான  சல்மான்கானின் விஜயம் எதிா்த்தரப்பினரின் வாய்க்கு அவலாக இருந்தது. ஆனால் சல்மான்கான் வந்த நாளே திரும்பி போய் விட்டாா்.

ஹிந்தவின் தோ்தல் பிரசாரப்பணிக்கு பயன்படும் வகையில் சல்மான்கான் அழைத்து வரப்பட்டதாகவும், அதற்கு அதிகளவான பணம் செலவிடப்பட்டிருப்பதாகவும் எதிா்த்தரப்பினா் குற்றம் சாட்டி வருகின்றனா்.



எதிர்பாராத வகையில் வந்த அன்றே இந்தியாவிற்கு திரும்பும் நிலை சல்மான்கானுக்கு ஏன் ஏற்பட்டது? பொது மக்களை பிரசாரக் கூட்டங்களுக்கு திரட்டும் நோக்கில் அழைத்து வரப்பட்ட சல்மான்கானின் நிகழ்ச்சிகள் இடைநிறுத்தப்படுவதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்தியாவில் அவருக்கெதிராக எழுந்த எதிா்ப்பும், குருணாகல கும்புக்கெட பகுதியில் ஆளும் கட்சிக்  குண்டா்களால் இலங்கை கலைஞா்கள் தாக்கப்பட்ட சம்பவமும், பொரளை கெம்பல் மைதானத்தில் இடம் பெற்ற நிகழ்ச்சியின் போது, பாராளுமன்ற உறுப்பினா் திலங்க சுமதிபால ஷாருக் கானுக்கு ஜயவேவா என்று சல்மானகானை வைத்துக் கொண்டு வாழ்த்துத் தொிவித்ததும் காரணங்களாக இருப்பதாக அறிய வருகிறது. ஷாருக்கானுக்கும், சல்மான்கானுக்குமிடையில் நீண்ட கால பகையிருப்பதாகவும்  கூறப்படுகின்றது.

சல்மான்கானின் வருகைக்கு 7 கோடி ரூபாய்கள் சன்மானம் வழங்கப்பட்டதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

Post a Comment

0 Comments