Ticker

6/recent/ticker-posts

மன்னன் என்கிற மமதையில் செயற்படுகின்றார் மஹிந்த - மன்னாரில் மைத்திரிபால


ந்த நாட்டில் ஏற்பட்டுள்ள எழுச்சியின் காரணமாக நீங்கள் எல்லோரும் மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் ஆட்சிக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளீர்கள் என்பதனை நான் அறிகின்றேன். இந்த வேளையிலே மகிழ்ச்சியான ஒரு விடையம் எதிர்வரும் 8 ஆம் திகதி எங்களுடைய அன்னச்சின்னம் நிச்சயமாக வெற்றி பெறும் என்பதனை உறுதியாக கூறிக் கொள்ளுவதாக ஜனாதிபதி எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.



-ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று (30) செவ்வாய்க்கிழமை காலை மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் இடம் பெற்றது.

இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்த நாட்டில் வாழுகின்ற மக்கள் ஏன் மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளனர் என்ற விடயத்தை நான் சுருக்கமாக உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

இரண்டு தடவைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களை ஆட்சிப்பீடம் ஏற்றியமை உங்களின் வாக்குகளினால் என்பதனை நீங்கள் அறிவீர்கள்.

இன்று மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் நினைப்பு என்னவென்றால் நான் மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற்ற ஒருவன் அல்ல. நான் ஒரு மன்னன் என்ற மமதையில் அவர் செயற்பட்டு வருகின்றார்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியாக அவர் மாறிவிட்டார். பலதரப்பட்டவர்களை அவர் அச்சுறுத்தி வருகின்றார். பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரது ஆலோசனைகளையும் அமுல்படுத்தமால் அச்சப்படுத்திக் கொண்டிருக்கின்றார். நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கா அவர்களையும் அச்சுறுத்தியுள்ளார்.

அதனால் இன்று நீதியரசர்கள் கூட அச்சப்படுகின்றனர்.

இந்த நாட்டில் பொலிஸார் சுதந்திரமாக செயற்படுவதற்கு ராஜபக்ஸவின் குடும்ப கோரிக்கைகளின் படி செயற்பட கட்டளை பிரப்பித்துள்ளார். அதே போன்றுதான் முப்படைகளுக்கும் அவர் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

வியாபாரிகளையும், பெரிய வியாபாரம் செய்யும் வியாபாரிகளையம் அச்சுறுத்தி கப்பம் பெற்று ராஜபக்ஸவின் குடும்பம் செயற்பட்டு வருகின்றது.

மக்களுக்கான நிதிகளிலும் அவர்கள் மோசடி செய்து வருகின்றனர். இந்த நாட்டின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய்களில் அரைவாசி கூட செலவு செய்யப்படாமல் அவர்களின் பொக்கற்றுகளுக்குள் செல்லுகின்றது.

இந்த நாட்டில் மக்கள் பட்டினியுடன் வாழ்ந்து வருகின்றனர். மூன்று வேளை உணவு உண்ண முடியாத நிலையில் கூட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

விவசாயிகள், மீனவர்களுக்கு அதிக பிரச்சினை உள்ளது. விவசாயிகளின் பிரச்சினை குறித்து இந்த அரசு எவ்வித அக்கறையும் எடுப்பதில்லை.

விவசாயிகளின் சிறுநீரக நோய் அதிகரித்துள்ளது. இந்த அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கீழ் வெளிநாட்டில் இருந்து விவசாயத்திற்கு பசளை, கிருமி நாசினி ஆகியவற்றை கொண்டு வந்து அவர்களின் இந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இடம்பெறுவதினாலேயே விவசாயிகள் இன்று இந்த சிறுநீரக பிரச்சினைகளுக்கு உள்ளாகி வருகின்றனர் என்றும் கூறினாா்.

Post a Comment

0 Comments