Ticker

6/recent/ticker-posts

தப்பியது மற்றுமோர் எயார் ஏசியா விமானம்!!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் இருந்து கலிபோ நகரத்திற்கு பிலிபைன்ஸ் நேரப்படி பி.பி 3.30 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்க விருந்த எயார் ஏசியா  Z2 272 விமானம் மேசமான காலநிலை காரணமாக இரண்டு மணித்தியாயலங்கள்  தாமதத்துடன் தனது பயணத்தை ஆரம்பித்தது.



இடைநடுவில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக அவரமாக கலிபோ விமான நிலையத்தில் தரையிறக்க வேண்டியேற்பட்ட நிலையில் பயணிகள் அனைவரும் முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டு எந்தவொரு அபாய சூழ்நிலைக்கும் முகங்கொடுக்கக் கூடிய வகையில் தயார்படுத்தப்படடிருந்தனர். 

பி.ப 5.43 கலிபோ விமான நியைத்தை வந்தடைந்நத விமானம் ஓடுபாதையையும் மீறிச் சென்று புல்வெளியில் தனது ஓட்டத்தை நிறுத்தியது. இச்சம்பவத்தில் பயணிகள் ஒருவருக்கும் சேதம் ஏற்டவில்லை. இதில் 153 பணிகள் பிரயானம் செய்தனர். 

கடந்த 28ம திகதி  இந்தோனேசியாவில் இருந்து  சிங்கப்பூரை நோக்கி பயணித்த QZ8501 இடைவானில் காணாமல் போயிருந்த நிலையில் தற்போது அவ்விமானம் ஜாவா கடலில் விபத்தக்குள்ளாகியிருப்பதாக ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருப்பதுடன் மீட்புப் பணிகளும் நடைபெற்றுவருகின்றன.

Post a Comment

0 Comments