Ticker

6/recent/ticker-posts

எயார் ஏசியா விமான விபத்து இதுவரை 40 சடலங்கள் மீட்பு


காணாமல் போன எயார் ஏசியா விமானம் புறப்பட்ட இடத்தில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஜாவா கடலில் விழுந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் விமானத்தில் பயணித்த 40 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 



இந்த சோகத்தை சொல்லிக்கொள்ள வார்த்தைகள் ஏதுமில்லை என எயார் ஏசியா தலைமை அதிகாரி தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். 



எயார் ஏசியா கடலில் தான் விழுந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலில் மிதக்கும் உடல்கள் தொடர்பான காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது வரை 40 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்தோனேஷியா கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். 



இதனையடுத்து சுர்பையா விமான நிலையத்தில், பலியான பயணிகளின் உறவினர்கள் குவிந்துள்ளனர். பயணிகள் இறந்துவிட்டனர் என்ற செய்தியை கேட்டதும், கூடியிருந்த பலர் தலையில் அடித்து கொண்டு அழுது கதறும் காட்சி அனைவரையும் நெஞ்சுருக செய்துள்ளது. 



பலர் சோகம் தாங்க முடியாமல் மயங்கி விழுவதையும் காண முடிகிறது.



Post a Comment

0 Comments