Ticker

6/recent/ticker-posts

நாட்டில் சீரற்ற காலநிலை தொடர்ந்தால் வாக்களிப்பு நிலையங்கள் இடம்மாறும் - தோ்தல் ஆணையாளா்

நாட்டில் கால­நிலை தொடர்ந்தும் மோச­மாக காணப்­படின் வெள்ள அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­க­ளுக்­கான வாக்­க­ளிப்பு நிலையங்கள் இடம்­மாற்றம் செய்­யப்­படும் என தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார்.
இதே­வேளை மோச­மான கால­நிலை கார­ண­மாக வாக்­காளர் அட்டை விநி­யோகம் தடைப்­பட்­டி­ருப்­ப­துடன் இதற்­க­மைய எதிர்­வரும் 4ஆம் திகதி வாக்­காளர் அட்டை முழு­மை­யாக
விநி­யோகம் செய்­யப்­ப­டு­வ­துடன் தேர்தல் நடத்­துனர் தொடர்பில் எதிர்­வரும் 3ம் திகதி மாவட்ட செய­லா­ளர்­க­ளுடன் விசேட கலந்­து­ரை­யாடல் கண்­டியில் இடம்­பெ­ற­வுள்­ளது எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இது தொடர்பில் நேற்று தேர்தல் செய­ல­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். மோச­மான கால­நிலை கார­ண­மாக வாக்­காளர் அட்டை விநி­யோகம் மற்றும் ஏனைய பல பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வரு­கின்றோம். கால­நிலை கார­ண­மாக பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­களில் எவ்­வாறு தேர்­தலை நடத்­து­வது தொடர்பில் ஆராய்ந்து வரு­கின்றோம். இருப்­பினும் தற்­போது கால­நிலை சற்று மாற்றம் கண்­டுள்­ளது.
இதற்­க­மைய மோச­மான கால­நி­லையில் தேர்­தலை எப்­படி நடத்­து­வது தொடர்பில் நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள அனைத்து மாவட்ட செய­லா­ளர்­க­ளையும் ஒன்று கூட்டி எதிர்­வரும் 3ம் திகதி கண்­டியில் பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளோம்.
மேலும் மோச­மான கால­நிலை கார­ண­மாக வாக்­காளர் அட்டை விநி­யோகம் தடைப்­பட்­டுள்­ளது. இதற்­க­மைய எதிர்­வரும் 4ம் திகதி விசேட தின­மாக கொண்டு வாக்­காளர் அட்டை விநி­யோகம் செய்­யப்­படும். அதே­வேளை தற்­கா­லிக அடை­யாள அட்டை எதிர்­வரும் 3ம் திகதி விநி­யோகம் செய்­யப்­ப­ட­வுள்­ளது. மேலும் தற்­கா­லி­க­மாக அடை­யாள அட்டை பெற்று கொடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கையை கண்­கா­ணிப்­பா­ளர்கள் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.
மேலும் மோச­மான கால­நிலை தொடர்ந்தும் நீடிக்­கு­மாயின் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­க­ளுக்­கான வாக்­க­ளிப்பு நிலை­யங்கள் இடம்­மாற்றம் செய்­யப்­படும். இதன்­போது அக­தி­க­ளாக தற்­கா­லிக முகாம்­களில் உள்­ள­வர்கள் தனக்­கு­ரிய வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கு சென்று தனது வாக்­கு­ரி­மை­களை பிர­யோகம் செய்ய முடியும்.
அத்தோடு அனர்த்தங்களின் போது தனது அடையாள அட்டை இழந்தவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அவற்றை தேர்தல் கண்காணிப்பாளர்கள் முன்னெடுப்பர் என்றார்.

Post a Comment

0 Comments