Ticker

6/recent/ticker-posts

சின்னச்சிப்பிக்குளம் தாருல் உலூம் பாடசாலையின் வருடாந்த "சாதனையாளர் கௌரவிப்பு விழா"!

 


வவுனியா, சின்னச்சிப்பிக்குளம் தாருல் உலூம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த "சாதனையாளர் கௌரவிப்பு விழா" கடந்த சனிக்கிழமை (09.09.2023) கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

கல்லூரி முதல்வர் அனீஸ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக வவுனியா மாவட்டச் செயலாளர் சரத் சந்திர, வலயக்கல்விப் பணிப்பாளர் அன்னமலர் சுரேந்திரன் மற்றும் சின்னச்சிப்பிக்குளம் ஜூம்ஆ மஸ்ஜித் தலைவர் இம்தியாஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் ஊர்ப்பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

Post a Comment

0 Comments