Ticker

6/recent/ticker-posts

'ஜீவன சக்தி' காப்புறுதி திட்டத்துக்கு மலையக மக்கள் பேராதரவு

 


தோட்டத்தொழிலாளர்கள் உட்பட பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு நலன் கருதி இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் எண்ணக்கருவில் உதித்த 'ஜீவன சக்தி' காப்புறுதி திட்டத்துக்கு மலையக மக்கள் பேராதரவு தெரிவித்துள்ளனர். 

அத்துடன், மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் புதிய திட்டங்களை செயற்படுத்தி வரும் அமைச்சருக்கு தமது நன்றிகளையும் தெரிவித்தனர்.

பெருந்தோட்டதுறையில் தொழில் நேரத்தில் இடம்பெறும் விபத்துகள் மற்றும் மரணங்களை கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நலன்கருதி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமையவே குறித்த காப்புறுதி திட்டம் அமுலுக்கு வந்துள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளருக்கும், அவரின் துணை மற்றும் இரு பிள்ளைகளுக்கு இத்திட்டம் செல்லுபடியாகும்.

காப்புறுதி காலத்தில் இறப்பு ஏற்பட்டால் 3 லட்சம் ரூபா நிதி வழங்கப்படும். 23 வகையான நோய்களுக்கு காப்புறுதி வழங்கப்படுகின்றது.

குளவிக்கொட்டு உள்ளிட்ட விடயங்களால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் - அங்கு தங்கி இருந்து சிகிச்சைபெற்றால் நாளொன்றுக்கு 500 ரூபா வீதம் வழங்கப்படும். இதர கொடுப்பனவும் வழங்கப்படும்.

இந்த காப்புறுதி திட்டத்துக்காக தொழிலாளர் ஒருவர் மாதம் 99 ரூபா செலுத்த வேண்டும். ஆறு மாதம் அல்லது ஒரு வருடகாலப்பகுதியில் நிதி அறவிடப்படும்.

தொழிலாளர்களை பாதுகாக்கவும், தொழிலாளர்கள் ஏனையோரை தங்கியிருக்கும் நிலையை நிவர்த்தி செய்வது திட்டத்தின் மற்றுமொரு நோக்கமாகும்.

தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமல்ல தோட்டத்தில் உள்ளவர்களும், தோட்ட அதிகாரிகளும் இந்த காப்புறுதி திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். 99 ரூபாதான் ஆரம்பம், பொருளாதார தேவைக்கேற்ப காப்புறுதி திட்டத்தை மாற்றிக்கொள்ளலாம்.

நாளொன்றுக்கு எங்களுக்கு மூன்று ரூபா தான் செலவாகின்றது, ஆனால் தொழிலின்போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் இது பெரும் உதவியாக இருக்கும் என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அதேபோல 99 ரூபாவில் இருந்து திட்டம் உள்ளது, உப தொழில்கள்மூலம் வருமானம் பெறக்கூடியவர்கள் மேலதிக வசதிகளை பெறும் வகையிலும் காப்புறுதி திட்டத்தை வடிவமைத்துக்கொள்வதற்கான வசதியும் உள்ளது.

இன்று ஒரு சிகரெட்கூட 120 ரூபாவுக்கு மேல்தான் விற்கப்படுகின்றது, வெற்றிலை பொதியொன்றின் விலைகூட 50 ரூபா, ஆனால் 99 ரூபாவுக்கு காப்புறுதி கிடைப்பது எவ்வளவு நல்லம்? உடலுக்கு தீங்கு விளைவிக்ககூடிய விடயங்களுக்குகூட பணத்தை செலவிடுபவர்கள், காப்புறுதிக்கு 99 ரூபா செலவிடமாட்டார்களா என்ன என்று தோட்ட தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதேவேளை, தோட்ட அதிகாரிகள், தோட்ட இளைஞர்கள், சுயதொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் என பலரும் இத்திட்டத்தை ஆதரித்து, அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments