Ticker

6/recent/ticker-posts

அரசாங்க பணத்தில் செலுத்தப்பட்ட தொலைபேசி கட்டணம்! அமைச்சர் கெஹலியவுக்கு எதிராக ஊழல் வழக்கு !


2012 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் நிதியில் இருந்து தனது தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசிக்காக சுமாா் இரண்டு லட்சத்து முப்பதாயிரம்  (230,000)  ரூபாவை செலுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக அமைச்சா் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி ஹீன்கெந்த ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு தொடுத்துள்ளது.

இந்த வழக்கு நேற்று (09) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்ய அனுமதிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரியிருந்தது.

அதன்படி நேற்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றில் சமர்ப்பித்தது.

இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி சமர்ப்பிக்கமாறு  நீதிபதி உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments