Ticker

6/recent/ticker-posts

ரிஷாத் பதியுதீனுடன் எந்த “டீல்” உம் இல்லை! - ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சீஐடியினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படாமல் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் விவகாரம் அரசியல் அரங்கில் சூடுபிடித்துள்ளது.

ரியாஜ் பதியுதீனின் விடுதலை விவகாரம் பெரும்பான்மை இன மக்களிடையே வாதப்பிரதிவாதங்களை உருவாக்கி வருகிறது. அரசாங்கத்திற்குள்ளும் பலர் இது தொடர்பாக தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

சர்ச்சையை கிளப்பியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது முகநூல் பதிவில் கீழ் வருமாறு தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

“நமது நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வது எனது அரசாங்கத்தின் முதல் மற்றும் முக்கிய பொறுப்பாகும்.

கடந்த காலங்களில் நடந்ததைப் போல, மக்களை கைது செய்யும் அல்லது விடுவிக்கும் அதிகாரத்தை அரசியல்வாதிகளிடம் ஒப்படைக்க நான் தயாராக இல்லை.
அத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது திணைக்களங்கள் விடும் குறைபாடுகள் அல்லது தவறுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பேன்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடன் எங்கள் அரசாங்கம் எந்த அரசியல் ஒப்பந்தத்திலும் ஈடுபடவில்லை என்பதை நான் உறுதிபட தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்மீது நம் நாட்டு மக்கள் இதுவரை வைத்திருந்த நம்பிக்கையை வீணாகாமல் என்றும், அந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த நான் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.”

Post a Comment

0 Comments