Ticker

6/recent/ticker-posts

“தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்” திரைப்படத்துக்கு தடை இல்லை


‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற தலைப்பில் மன்மோகன் சிங்கின் முன்னாள் ஊடக ஆலோசகர் (2004 - 2008) சஞ்சயா பாரு புத்தகம் எழுதி வெளியிட்டார்.
அந்தப் புத்தகம் பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியது. மேலும், உண்மைக்குப் புறம்பான தகவல் கள் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள தாக காங்கிரஸார் கூறினர்.
தற்போது, ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்று அதே தலைப்பில் இந்தியில் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மன்மோகன் சிங் வேடத்தில், பாஜக ஆதரவாளர் நடிகர் அனுபம் கெர் நடித்துள்ளார். இதன் டிரெய் லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், திரைப்படத்துக்கு மத்தியபிரதேச காங்கிரஸ் அரசு தடை விதித்துள்ளதாக சில ஊடகங் களில் செய்தி வெளியானது. இதுகுறித்து ம.பி. அரசு மக்கள் தொடர்புத் துறை நேற்று கூறும்போது, ‘‘திரைப்படத்தை தடை செய்வது தொடர்பாக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை’’ என்று தெரிவித்துள்ளது.
இந்தப் படம் குறித்து பாஜக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, ‘‘இந்த நாட்டை 10 ஆண்டுகள் ஒரு குடும்பம் எப்படி கொள்ளையடித்தது என்பதை ஆணித்தரமாக சொல்லும் கதை. இந்தப் படம் ஜனவரி 11-ம் தேதி வெளியாகிறது. அனைவரும் பாருங்கள்’’ என்று விளம்பரப்படுத்தி உள்ளது. tamil.thehindu

Post a Comment

0 Comments