Ticker

6/recent/ticker-posts

விடுவிக்கபட்ட பிரதேசங்களின் பாடசாலைகளையும் விடுவிக்கபடாத பாடசாலைகளையும் உடனடியாக மீள் கட்டமைக்க நடிவடிக்கை - கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்



சிறைச்சாளைகள் மறுசீரமைப்பு¸ புனர்வாழ்வு மீள் குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவலகள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய  வடக்கில் விடுவிக்கபட்ட மீள்குடியேற்ற பிரதேசங்களின் பாடசாலைகளையும்  விடுவிக்காத பாடசாலைகளையும் உடனடியாக மீள் கட்டமைக்க நடிவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.
அதற்கு அமைய இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சில்; கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு¸ புனர்வாழ்வு மீள் குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி.சுரேஸ்¸ இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்;ஸ ஹேவவித்தான¸ கொழும்பு இராணுவ தலைமையகத்தின் கேர்ணல் டி.சீ.சீ. கனேபல¸ கல்வி அமைச்சின் பாடசாலைகள் கட்டிட அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் கலாநிதி யூ.ஜி.வை. அபேகோன்¸ பணிப்பாளர் எஸ்.முரளிதரன்¸ மேலதிக பணிப்பாளர் எஸ்¸யூ.விஜேகோன்¸ அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஆர்.திவாகரன்¸ வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தின் உதவி செயலாளர் எஸ்.ஜெயராம்¸  அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எஸ்.சத்தியசீலன் மற்றும் அமைச்சரின் செலயலாளர்கள் கலந்துக் கொண்டார்கள். 

இந்த கலந்துறையாடலின் பயனாக விடுவிக்கபட்டு மீள்குடியேற்றம் நடைபெற்று வரும் பிரதேசங்களின் பாடசாலை உடனடியாக புனர்நிர்மாணம் செய்வதற்கும்¸ தற்போது குறைபாடுகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் பாடசாலைகளுக்கு தளபாடங்ளை உடனடியாக வழங்குவதற்கும் பாதிக்கபட்ட பாடசாலைகளை பார்வையிட்டு மேலும் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்குமான தீர்மானங்கள் எட்டபட்டுள்ளன.

காணிகள் விடுவிக்கபட்ட பகுதியில் பாடசாலைகள் மாத்திரம் விடுவிக்கபடாத பாடசாலைகளை  இராணுவத்தின் அனுமதியுடன் விடுவிக்கபட்டு அந்த பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கைள் முன்  வைக்கபட்டுள்ளன. இதற்கு இராணுவத்தின் அனுமதி தேவை என்றபடியால் முழுமையான விபரங்களை கொழும்பு இராணுவ தலைமையகத்தின் கேர்ணல் டி.சீ.சீ. ககேபல அவர்கள் வேண்டியுள்ளார். அதன் பிறகு உயர் இராணுவ அதிகாரிகளிடம் பேச்சுவார்தை நடாத்தி அனுமதி கிடைத்தவுடன்  அந்த பாடசாலைகளும் திருத்தப்பட்டு மாணவர்கள் முறையாக கல்வி கற்பதற்கான வசதி வாய்ப்புகள் செய்துக் கொடுக்கப்படும். 

இந்த கலந்துரையாடல் மிகவும் விட்டுக் கொடுப்புடன் நடைபெற்றதுடன் மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காக எதையும் செய்ய முடியும் என்ற நிலையில் ஒரு சாதகமான கலந்துரையாடலாக காணப்பட்மை ஒரு சிறப்பம்சமாகும்.

Post a Comment

0 Comments