Ticker

6/recent/ticker-posts

கொழும்பில் புதிய வகை நுளம்பு : பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மூளைக் காய்ச்சலைப் பரப்பும் ஒருவகை நுளம்பு கொழும்பை அண்டிய பிரதேசங்களில் காணப்படுவதாக சுகாதாரப் பிரிவு பொது மக்களுக்கு எச்சரித்துள்ளது. மாலை 6 மணிக்கும் இரவு 10 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த நுளம்பின் தாக்கம் கூடுதலாகக் காணப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி வைத்திய நிபுணர் றுவான் விஜயமுனி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த நுளம்பு கடித்ததன் பின்னர் எரிவு, அரிப்பு, தேகம் சிவந்து போதல் முதவான அறிகுறிகள் காணப்படும் என்று அவர் கூறினார்.

Post a Comment

0 Comments