Ticker

6/recent/ticker-posts

பிரகீத் எக்நெலிகொட வெலிகந்த முகாமிற்கு அருகாமையில் கொன்று புதைக்கப்பட்டாரா?

லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. எக்நெலிகொட ஐந்து நாட்கள் கிரித்தலே முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் எனவும், மூன்று நாட்கள் மிகக் கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார் எனவும் புலனாய்வுப் பிரிவு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“குடும்ப மரம்” என்ற தலைப்பிலான சஞ்சிகை ஒன்று தொடர்பில் முதல் இரண்டு நாட்களும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் எக்நெலிகொடவிடம் கடுமையான விசாரணை நடத்தியுள்ளனர். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் பேணப்பட்ட உறவுகள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இரண்டு உயர் இராணுவ அதிகாரிகளினால் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கிரித்தலே இராணுவ முகாமிலிருந்து பின்னர் வெலிந்த முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட வெலிகந்த முகாமிற்கு அருகாமையில் உள்ள பகுதியொன்றில் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற ஊகத்தை புலனாய்வுப் பிரிவினர் வெளியிட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

Post a Comment

0 Comments