Ticker

6/recent/ticker-posts

சேயா விவகாரம் – சட்டவைத்திய அதிகாரி ருஹூல் ஹக்கின் இரு அறிக்கைகளும் முரண்பட்டவை

கொட்டதெனியாவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியான சேயா சந்தவமியின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவன் தொடர்பில் நீர்கொழும்பு சட்டவைத்திய அதிகாரி ருஹூல் ஹக்,(ஜே.எம்.ஓ), முரண்பாடான மற்றும் நெறிமுறைகளை மீறிய இரண்டு அறிக்கைகளை முன்வைத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு, நேற்று திங்கட்கிழமை(12) முடிவு செய்துள்ளது.

குறித்த விசாரணையை முன்னெடுத்த, பிரியந்த பெரேரா மற்றும் நிமல் புஞ்சிஹேவா ஆகிய அதிகாரிகள் இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதியன்று ஒரு அறிக்கையும் 30ஆம் திகதியன்று மற்றுமொரு அறிக்கையும் அவரின் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாக குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவன் மற்றும் அவருடன் விடுவிக்கப்பட்ட ஒரு பிள்ளையின் தந்தை ஆகியோர் தமது சட்ட ஆலோசகருடன் ஆணைக்குழுவுக்கு நேற்று வந்திருந்தனர்.
இது தொடர்பான மனுவை, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments