Ticker

6/recent/ticker-posts

கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு பிரிட்டன் ஒப்புதல்

பிரிட்டனில் முதல்முறையாக பத்து பெண்களுக்கு கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்களுக்குத் தேவையான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனைகளின் ஒரு பகுதியாக இந்த கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

கடந்த ஆண்டு ஸ்வீடனில் இத்தகைய கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஒரு பெண்ணுக்கு பிறந்த குழந்தை தான் உலகிலேயே கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பிறந்த முதல் குழந்தையாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஸ்வீடனில் உயிருடன் இருக்கும் பெண்ணின் கர்ப்பப்பையை மாற்று அறுவை சிகிச்சை செய்ததைப் போலல்லாமல், பிரிட்டன் மருத்துவர்கள் இறந்த பெண்களிடம் இருந்து பெறப்பட்ட கர்பப்பைகளை தமது அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தவிருக்கிறார்கள்.
கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை பரிசோதனைகள் செய்வதற்கான ஒப்புதல் வேண்டி பிரிட்டன் மருத்துவர்கள் ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கர்பப்பைகள் மாற்று அறுவை சிகிச்சைகள் தேவைப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போதைய இந்த பரிசோதனைகள் வெற்றிபெறுமானால், கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் பிரிட்டனின் முதல் குழந்தை 2017 ஆம் ஆண்டில் பிறக்க வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகிறது.
bbc.com

Post a Comment

0 Comments