Ticker

6/recent/ticker-posts

திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தில் சந்திரிக்கா !

திஹாரியிலுள்ள இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
முன்னாள் பிரதமர்களான எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க, முன்னாள் சபாநாயகர் அனுர பண்டாரநாயக்க ஆகியோரின் ஞாபகார்த்த நிகழ்வு திஹாரிய இஸ்லாமிய அங்கவீனர் நிலையத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, துறைமுகம் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, ஆகியோர் கலந்து கொண்டனர்.
அங்கவீனர் நிலையத்தின் மாணவர்கள் மட்டுமன்றி, பிரதேசவாசிகளும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் அங்கவீனமுற்ற மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் செவிப்புலன் கருவிகளை வழங்கி வைத்தனர்.

Post a Comment

0 Comments