Ticker

6/recent/ticker-posts

கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் சர்ச்சைக்குரிய திட்டம் குறித்து கேள்வியெழுப்பிய முஜீபுர் றஹ்மான்!


கடந்த கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய திட்டங்களை விக்கிரமசிங்க-ராஜபக்ஷ அரசாங்கம் தொடர்வதாக சமகி ஜன பலவேகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.

ரோஹித அபேகுணவர்தன துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சராக இருந்த போது அவரினாலல் ஆரம்பிக்கப்பட்ட 'கொழும்பு துறைமுகத்தில் தெற்காசிய தளவாட மையத்தில் முதலீடு' என்ற  செயற்திட்டம் குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக கடந்த ஜூலை 21, 2021 திகதியிட்ட அமைச்சரவை குறிப்பாணையின்படி, ஜூலை 26, 2021 அன்று அமைச்சரவை இது குறித்து முடிவெடுத்ததா என்பதை அறிய விரும்புவதாக முஜிபுர் ரஹ்மான் கூறினார்.

எதிர்க்கட்சிகள் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சிடம் நேற்று தாம் தொடர் கேள்விகளை சமர்ப்பித்ததாகவும் அவர் கூறினார்.

கொழும்பு துறைமுக எல்லைக்குள் அமைந்துள்ள 14 ஏக்கர் நிலப்பரப்பை இலங்கைக்கு மிகவும் பாதகமான சீனத் திட்டத்திற்கு வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியின் மதிப்பீடு தொடர்பில் தாம் அவதானமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த திட்டம் தொடர்பான தகவல்களை ஜனாதிபதி உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments