Ticker

6/recent/ticker-posts

50 நாட்களில் 11 போ் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்!


ஹோமாகம மரண விசாரணை அதிகாரியின் எல்லைக்குள் 15 வயதுடைய பாடசாலை மாணவி உட்பட 11 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஹோமாகம மரண விசாரணை அதிகாரி  பி.எச். கே. சிந்தக உதய குமார தெரிவித்துள்ளார். 

பனாகொட, ஹபரகட, நியதகல, பிடிபன, ஹிரிபிட்டிய, மீகொட, ஹன்வெல்ல மற்றும் ஹோமாகம ஆகிய பகுதிகளில் இந்த தற்கொலைகள் பதிவாகியுள்ளன. தற்கொலை செய்து கொண்ட  நபர்கள் 15 முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இதில் 07 மரணங்கள் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களினால் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் மற்றும் மதுபானம் அருந்தி மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் தற்கொலை செய்து கொண்டதாகவும், மேலும் சில மரணங்கள் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்தினால் ஏற்பட்டுள்ளதாகவும் சிந்தக உதய குமார தெரிவித்தார்.

மேலும், மீகொட பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், காதல் விவகாரத்தினால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இவா் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவா் தொிவித்துள்ளாா்.

Post a Comment

0 Comments