Ticker

6/recent/ticker-posts

ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட, பிரதேச கிளைகளுக்கான விஷேட அறிவித்தல்

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

அல்லாஹு தஆலா நம் அனைவரையும் சகல விதமான சோதனைகளை விட்டும் பாதுகாப்பானாக.. ஆமீன்!

நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு இன்று 24.03.2020 (செவ்வாய்க்கிழமை) ஜம்இய்யாவின் தலைமையகத்தில் சிவில் மற்றும் சமூக தலைமைகள் கூடிய கூட்டத்தில் நிவாரண உதவிகளை வழங்குவதற்கான கீழ்வரும் பொறிமுறையை ஜம்இய்யா அவசரமாக அறிமுகம் செய்திருக்கிறது.

இதன் அடிப்படையில் சகல மாவட்ட மற்றும் பிரதேசக் கிளைகள் செயலாற்றும் படி ஜம்இய்யா வேண்டிக் கொள்கிறது.

உங்களது பிரதேசத்தில் உள்ள மஸ்ஜித் சம்மேளனம் அல்லது மஸ்ஜித் நிருவாகிகளுடன் இணைந்து அங்குள்ள ஒரு பிரதான மஸ்ஜிதை இனங்கண்டு அதனை ஒரு மத்திய நிலையமாக அறிமுகம் செய்தல்.

இதற்காக வேண்டி ஜம்இய்யா சார்பாக 5 பேரும் மஸ்ஜித் சம்மேளனம் அல்லது பிரதான மஸ்ஜித் சார்பாக 5 பேரும் கொண்ட ஒரு குழுவை நியமனம் செய்தல். எண்ணிக்கையை தேவைக்கேற்ப வைத்துக் கொள்ளலாம்.

ஊரடங்குச் சட்டத்தின் போது சென்று வர இருவர் அல்லது மூவருக்கு அனுமதியையும், ஒரு வாகனத்திற்குரிய (மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி உற்பட) அனுமதியையும் (Curfew Pass)  பெற்றுக் கொள்ளல்.

மத்திய நிலையத்திற்கான ஒரு தொலைபேசி இலக்கத்தை (Hotline) அறிமுகம் செய்தல்.

அந்தந்தப் பிரதேசத்திலுள்ள சகல மக்களிடமும் தம்மிடம் மேலதிகமாக இருக்கின்ற கீழ்வரும் பொருட்களை பிரதேச நிலையத்திற்கு ஒப்படைக்குமாறு வேண்டிக் கொள்ளல். அது தம்மிடம் இருக்கும் சிறிய அளவிலான (உம்-250g) பொருளானாலும் சரியே.

தம்மிடம் இருக்கும் மேலதிகப் பொருட்களை ஒப்படைக்க குறித்த தொலைபேசிக்கு அறிவிக்கும் படியும் அத்தியவசியப் பொருட்கள் தேவையானவர் குறித்த தொலைபேசிக்கே அறிவிக்கும் படியும் மக்களை வேண்டிக் கொள்ளல்.

நிலையத்திலிருந்து பொருட்களை தேவையானவர்களுக்கு வழங்கும் போது பொருத்தமானவர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு தேவைக்கேற்ற அளவு கொடுத்துதவுதல்.

பொலிஸ் நிலையத்தில் அனுமதி பெற்ற வாகனம் பொருட்களை சேர்க்கவும் அல்லது தேவையானவர்களுக்கு கொடுக்கவும் சென்று வரும். வேறு எவரும் அல்லது எந்த வாகனமும் அனுமதியின்றி செயற்பட மாட்டாது.

மனிதபிமான அடிப்படையில் செய்யப்படும் இவ்வுதவி இன மத வேறுபாடின்றி சகலரையும் சென்றடைவதை உத்தரவாதப்படுத்திக் கொள்ளல்.

இந்நிவாரணப் பணிகளில் ஈடுபடும் போது தொண்டர்களின் எண்ணிக்கை அதிக அளவு இருப்பதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளல். அத்துடன் பொருட்களை சேகரிக்கும் போது அதனைப் பொதி செய்யும் போதும் மற்றும் அதனை விநியோகிக்கும் போதும் சுகாதார வழிமுறைகளைப் பேணி நடந்துகொள்ளல்.

இந்த சிறப்பான பணியை ஆலிம்கள், பள்ளி வாசல் நிர்வாகிகள், தனவந்தர்கள் மற்றும் ஊர் பிரதானிகள் யாவரும் ஒன்றிணைந்து செயற்படுத்த முன்வருமாறு ஜம்இய்யா வேண்டிக் கொள்கிறது.
எதிர்பார்க்கப்படும் அத்தியவசியமான பொருட்கள்:

அரிசி / சீனி
பருப்பு
பால் மா
தேயிலை
கோதுமை மாவு
செமன் டின்

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாரக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Post a Comment

1 Comments

  1. When the government is taking care of the food security situation to cater to the citizens od Sri Lanka in need, why should the ACJU create a parellel system only to cater to the Muslims in Sri Lanka? Is this NOT communalism and dividing reconciliation on "RELOGIOUS LINES". THIS WILL ALSO LEAD TO CONFLICTS BETWEEN THE MUSLIMS AND OTHER COMMUNITIES IN THE FUTURE. The ACJU should advice all Muslims philanthropists and generous Muslims who are willing to make food donations to contact the newly set-up Task Force under Basil Rajapaksa and hand over the goods or the FUNDS to that operation so that they can distribute it to needy Muslims who will communicate with the Task Force free of charge as donations, if needed. By doing so, wae are working as "PARTNERS" in this National Operation and "NOT AS A SEPERATE ENTITY" with "SHELFISHNESS, Insha Allah.
    Noor Nizam - Conveber "The Muslim Voice".

    READ BELOW THE NEWS:
    பசிலுக்கு முக்கிய பதவி - ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு
    Tuesday, March 24, 2020 http://www.jaffnamuslim.com/2020/03/blog-post_822.html
    President Gotabaya Rajapaksa appointed a special task force headed by Basil Rajapaksa to work out modalities of organizing a mobile service to deliver consumer items at the doorstep of the online customers in the wake of the current situation due to the Covid -19 crisis.
    The Presidential Secretariat issues a circular stating that a special task force has been established headed by Basil Rajapaksa to efficiently conduct the mechanism of distributing essential commodities to the homes of consumers.
    The rest of the members in this task force are the ministerial secretaries, Government Agents, Divisional Secretaries and other officials.
    A special mechanism of home delivering essential commodities to consumers including essential food items, medicines, gas and other essentials without any hindrance will commence from tomorrow (25).
    All delivery vehicles including lorries, vans, trishaws, motorcycles and other transport vehicles will be permitted to travel during curfew hours.
    Accordingly, the government has advised the wholesale establishments which home deliver essential commodities to commence their services from tomorrow.
    Sathosa, Keels, Laughs, Arpico, Food City, Araliya, Nipuna and other wholesale traders will be engaged in this endeavour.

    ReplyDelete