Ticker

6/recent/ticker-posts

தினேஷ் குணவர்தன புதிய பிரதமர்?

கோத்தாபய ய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் புதிய அமைச்சரவைக்கான அமைச்சர்கள் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பிள்ள மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் தினேஷ் குணவா்தனவை பிரதமராக நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்தள்ளதாக அறிய வருகிறது.

ஜனாதிபதி தேர்தலில் மக்கள்  அளித்த ஆணைக்கு  மதிப்பளித்து பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் பதவி விலகினால், அமைச்சரவை ரத்து செய்யப்பட்டு, புதிய பிரதமரை நியமிக்க வேண்டும்.

அமைச்சரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்த பின்னணியில் அரசாங்கத்தை அமைக்க வேண்டிய அவசியமும் உள்ளது.

மங்கள சமரவீரவும் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார்.

மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு  அரசாங்கத்தை விட்டு வெளியேற  நல்லாட்சி அரசாங்கம் எடுக்கவிருக்கும்  முடிவு அரசியல் ரீதியாக முன்னுதாரணமாக  பார்க்கப்படும்.

Post a Comment

0 Comments