Ticker

6/recent/ticker-posts

3 ம் திகதி மதுபான சாலைகளுக்கு பூட்டு

( ஐ. ஏ. காதிர் கான் )

   சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, 3 ஆம் திகதி வியாழக்கிழமை, நாட்டிலுள்ள சகல மது விற்பனை நிலையங்களும்  மூடப்படவுள்ளன. 

   சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, நாட்டில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை மற்றும் கலால் அனுமதிப் பத்திரங்களைப் பெற்ற நிலையங்களை  (ஒக்டோபர் 3) மூடுவதற்கு கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

   இதற்கு அமைவாக,  (ஒக்டோபர் 3) நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை மற்றும் கலால் பத்திர அனுமதியுடனான நிலையங்கள் மூடப்படுவதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

   கலால் திணைக்களத்தின் இந்த உத்தரவை மீறும் மதுபான விற்பனைக்காகத் திறக்கப்படும் அனுமதி பெற்ற நிலையங்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கலால் திணைக்களம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. 

   நாட்டில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையைப் போன்று, சட்ட விரோத மதுபான விற்பனைக்கு எதிராகவும், சட்ட விரோத போதைப்பொருள் தயாரிப்பு, எடுத்துச் செல்லல், வைத்திருத்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்கும், சட்டத்தை மீறுவோரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும் கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

   இந்தப் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்காக, நாடு முழுவதிலுமுள்ள 58 கலால் திணைக்கள நிலையங்களுக்கு உட்பட்ட சுமார் 1,000 பேரை உள்ளடக்கிய குழுவினர், அந்தந்த மாகாணத்திற்குப் பொறுப்பான உதவிக் கலால் ஆணையாளர் மற்றும் அந்தந்த மாவட்டத்திற்குப் பொறுப்பான கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments