Ticker

6/recent/ticker-posts

மலையக மக்கள் இனவாதத்திற்கு எதிரானவர்கள் நாங்கள் முஸ்லிம் மக்களுக்கு நாம் காவலர்களாக இருப்போம் - பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ்

மலையக மக்கள் இந்த நாட்டில் இன மத சாதி வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களிடமும் ஒன்றமையாக வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் இனவாத்தை விரும்பாதவர்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் அண்மைகாலமாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கும் பேரினவாதிகளின் செயற்பாடுகளையிட்டு நான் கவலையடைகின்றேன். 

நாங்கள் மதத்தால் வேறுபட்டாலும் மொழியால் ஒன்றுபட்டு அவர்களுக்கும் சேவை செய்து அவர்களுடன் இணைந்து மலையகத்தில் செயற்பட்டு வருகின்றோம். இவ்வாறான சந்தர்பத்தில் மலைய மக்கள் இனவாத செயற்பாடுகளில் ஈடுபட மாட்டார்கள் அதற்கு துணை போகவும் மாட்டார்கள். அவர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்காவே செயற்பட்டு வருகின்றனர். அவர்கள் பொருளாதாரத்தில் பின்னடைவை எதிர் நோக்கினாலும் நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெழும்காகவே இருந்துள்ளனர் என்று பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஷ் கூறினார்.


பதுளை மாவட்டம் பண்டாரவலை ஹப்புத்தலை பிரதேசங்களுக்கு உட்பட்ட தோட்ட தொழிலாளர்களுடனான சந்திப்பு ஒன்று பண்டாரவலையில் நடைபெற்ற போது அங்கு மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து  தெரிவித்த இராஜாங்க அமைச்சர்

மலையக மக்கள் என்ற வகையில் நாங்கள் முஸ்லிம் மக்களுக்கு காவற்கார்களாக இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டியது எம் அனைவரினதும் கடமையாகும். நாம் மதத்தால் வேறுபட்டு இருந்தாலும் மொழியால்; ஒன்றுபட்டவர்கள். தற்போது இந்த நாட்டில் பேரினவாதம் தலைதூக்கி  உள்ளது. இதனை அப்படியே விட்டுவிட முடியாது. இதனால் பாதிக்கபடுவது சிறுபான்மை மக்களே. அன்று 1983 இனக்கலவரம் காரணமாக மலையத்தில் பலர் இந்த நாட்டைவிட்டு வெளியேரினர். அதே போல் 30 வருட கொடூர யுத்தம் காரணமாக யாழ்ப்பாண மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இவ்வாறான நிலையில் முஸ்லிம் மக்களும் இந்த நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்க முடியாது.

இந்த நாட்டில் ஏற்பட்ட பல இனக்கலவரங்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. இதனால் நாடு பின் நோக்கி சென்றுள்ளது. இவை இனியும் தொடர அனுமதிக்க முடியாது. இந்த நாடு வளம் பெற வேண்டுமானால் நாட்டில் உள்ள அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக ஒரணியில் வாழ வேண்டும். இந்த நாட்டை வளம் பெரும் நாடாக எமது எதிர்கால சமுதாயத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடமை எம் அனைவருக்ரும் உள்ளது. 

தற்போது நாட்டில் பேரினவாதிகளின் செயற்பாடுகளினால். மக்கள் அச்சத்தில் உள்ளனர.; குறிப்பாக முஸ்லிம் மக்கள் என்ன செய்வது என்று அறியாமல் உள்ளனர். இவர்கள் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை சரியாக வியாபார நடிவடிக்கைகளில் ஈடுபடவில்லை. தங்களது முதலீடுகளை முதலீடு செய்ய பயப்படுகின்றனர். பணம்படைத்த செல்வந்தர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக பெண்கள் வீட்டை விட்டு வெளி இடங்களுக்கு  செல்வது கூட இல்லை. மிகவும் அச்சத்தில் உள்ளனர் இந்நிலை மாற வேண்டும். இதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இந்த நாட்டை கடடியெழுப்பும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். என்று கூறினார்.

Post a Comment

2 Comments