Ticker

6/recent/ticker-posts

கொழும்பு துறைமுகத்திற்கு சென்ற அமைச்சர் சாகல ரத்னாயக்க

துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் சாகல ரத்னாயக்க, இன்று கொழும்பு துறைமுகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இவ்விஜயத்தின் போது துறைமுக அதிகார சபை தலைவரின் அலுவலகம், ஹாபர் மாஸ்டர் அலுவலகம் (Harbour Master Office), ஜயபாலு முனையத்தின் நிர்வாகக் கட்டிடம் ( JCT Administration Building) உள்ளடங்களாக துறைமுகத்தில் உள்ள பல இடங்களை கண்காணித்துள்ளார்.
துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பராக்கிரம திஸாநாயக்க, இலங்கை துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ அத்தியகட்சர் அத்துல ஹேவாவித்தாரன, இலங்கை துறைமுக அதிகார சபையின் செயற்பாட்டு அத்தியகட்சர் ஜயந்த பெரேரா உள்ளடங்களாக நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்..

Post a Comment

0 Comments