Ticker

6/recent/ticker-posts

“ இனவாத தாக்குதல்களை மறைக்க முற்படும் நீதியமச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ” - வழக்கறிஞர் லக்ஷான் டயஸ்


சிங்கள மொழி மூலம் சிலோன் ஜர்ணல்ஸ் -  தமிழில் – ஏ. எம். எம். முஸம்மில், பதுளை
மக்களை  ஏமாற்றும் வகையிலான கருத்துக்களை கூறி நாட்டிற்குள் நடைபெற்றுவரும் சமயங்களுக்கு எதிரான வன்முறை  தாக்குதல்களை மூடிமறைக்க முயற்சி செய்யும்  நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்று சமய உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் மனித உரிமை போராளியான வழக்கறிஞர் லக்ஷான் டயஸ் தெரிவித்துள்ளார்.   கிறிஸ்தவ மதத்தினருக்கு எதிராக மேற்கொள்ளப் படும் தாக்குதல்களை ஜனாதிபதி மற்றும் நீதியமைச்சர் ஆகியோரால் பிழையாக புரிந்து கொள்ளப் பட்டு கருத்துக்கள் வெளியிடப் பட்டுள்ளது என்று அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
கிறிஸ்தவ மத ஸ்தலங்களுக்கு எதிராக மேற்கொள்ளப் படும் தாக்குதல்கள் பற்றியதொரு தொலைக்காட்சி நிகழ்வொன்றில் வழக்கறிஞர் லக்ஷான் டயஸ் தெரிவித்த கருத்தொன்றுக்கு மறுப்புத் தெரிவித்து பொது நிகழ்வொன்றில் உரை நிகழ்த்திய நீதியமைச்சர் விஜேதாச ராஜ பக்ஷ அவர்கள் “  வழக்கறிஞர் லக்ஷான் டயஸ் தாம் கூறிய தவறான கருத்திற்கு எதிராக 24 மணி நேரத்திற்குள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்காவிடின் அவரை  வழக்கறிஞர் தொழிலிலிருந்து அவரை நீக்கிவிடுவேன் “ என்றும் பகிரங்கமாக அறிவித்திருந்தார். ஜனாதிபதியவர்களும்   வழக்கறிஞர் லக்ஷான் டயஸ் அவர்களின் கூற்றை மறுத்து கருத்துக் கூறியிருந்தார்.
கத்தோலிக்கர்களுக்கு எதிராக தாக்குதல்கள் எதுவும் நடக்க வில்லை என்ற கூற்றில் உண்மை இருக்கலாம் என்றும் , இத்தாக்குதல்கள் விடயமாக காதினல் அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்த வழக்கறிஞர்  கத்தோலிக்க சபையினரால் இவாஞ்சலின் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்ட தாக்குதல்களுக்கு எதிராக தாம் பல வழக்குகளை முன்னெடுத்து செல்வதாகவும் தெரிவித்தார். கத்தோலிக்க மத பிரிவினர்களாலும் பௌத்த மதத்தினராலும் கிறிஸ்தவர்கள் தாக்குதல்களுக்கு இலக்காகி உள்ளார்கள் என்று சிலோன் ஜர்ணலஸ்க்கு சுட்டிக் காட்டும் வழக்கறிஞர் லக்ஷான் டயஸ் அவர்கள் , தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின் இவ்வாறான 195 சம்பவங்கள் கிறிஸ்தவ தர்மதான ஒன்றியத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.  
கத்தோலிக்க மத பிரிவினர்களாலும் பௌத்த மதத்தினராலும் கிறிஸ்தவர்கள் தாக்குதல்களுக்கு இலக்காகி உள்ளார்கள் என்ற விடயம் இந் நாட்டு போலிஸ் பதிவுகளிலும் ஐக்கிய ராஜ்யத்தின்  சமய சுதந்திரம் சம்பந்தமான வருடாந்த அறிக்கையிலும் உள்ளடங்கப் பட்டுள்ளதாகவும்  வழக்கறிஞர் லக்ஷான் டயஸ் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றார். அதேவேளை ஜனாதி பதியவர்களுக்கும் இது விடயமாக  இவாஞ்சலின் கிறிஸ்தவ சபையினரால் அறிக்கை சமர்பிக்கப் பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளார்  

வழக்கறிஞர்களை நியமிக்கும் அதிகாரமோ அவர்களை பதவி நீக்கும் அதிகாரமோ நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களுக்கில்லை என்று கூறிய லக்ஷான் டயஸ் அவர்கள் அவ்வாறானதொரு அதிகாரம் தமக்கு இருப்பதாக பகிரங்காமாக கூறுவது அவ்வதிகாரத்தையுடைய உயர் நீதிமன்றத்தை அவமதித்த செயலாகும் என்றும் சுட்டிக் காட்டினார்.  
ஆகவே இந் நாட்டின் பொறுப்பு வாய்ந்த வொரு அமைச்சர்  மக்களை ஏமாற்றி திசை திருப்பும்  வகையயில்  கருத்துக் கூறியமைக்காக நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்  கோரிக்கை விடுத்தார்.  

Post a Comment

1 Comments

  1. Thanks for sharing.
    You can find latest govt results, it is very useful click here.

    ReplyDelete