Ticker

6/recent/ticker-posts

மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தை மஸ்ஜிதாக மாற்ற வேண்டும்! அஸ்ஸெய்க் ஐ.என்.எம் மிப்லால் கோரிக்கை

எம்.எச் முஹம்மத் அவர்களின் மறைவிற்கு பின்னர் மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தின் செயற்பாடுகள் எவ்வாறு அமையும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழ ஆரம்பித்திருக்கிறது.
மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையம் தொடர்பாக அவர் உயிருடன் இருக்கும் போதே பல சர்ச்சைகள் உருவாகியிருந்தன. 
மாளிகாவத்தை தேசிய வீடமைப்பு திட்டத்திற்கு பள்ளிவாசலுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில்தான் இஸ்லாமிய நிலையம் உருவாக்கப்பட்டு அல்ஹாஜ் எம்.எச். முஹம்மத் அவர்களின் குடும்பத்தினரின் நேரடி கட்டுப்பாட்டில் இந்நிறுவனம் இயங்கி வந்தது.

மேற்படி வீடமைப்பு திட்டத்தில் வசிப்போருக்கு தொழுகைக்காக ஒரு சிறிய அறையையே அதுவும் அந்தக் கட்டிடத்தின் குளியலறையையே தொழுகைக்கான அறையாக மாற்றி அப்போதைய இஸ்லாமிய நிலைய நிர்வாகம் ஒதுக்கியிருந்தது.
தொழுகைக்கான இடப்பற்றாக்குறையை எடுத்துக் கூறி பொதுமக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தும் இஸ்லாமிய நிலைய நிர்வாகம் அதற்கு இசைந்து கொடுக்கவில்லை.
அரசியல் அதிகாரத்தை பாவித்து எழுந்து வரும் எதிர்பலையை சமாளிக்க எம்.எச். முஹம்மத் அவர்கள் இஸ்லாமிய நிலையத்திற்கு பின்னால் உள்ள சிறிய நடைப்பாதை பகுதியில் தொழுகைக்காக சிறியதொரு கட்டிடத்தை கட்டிக் கொடுத்தார்.
தற்போது அதிகரித்து வரும் ஜனப்பெருக்கத்திற்கு மத்தியில் சட்ட விரோத நிலத்தில் கட்டப்பட்டுள்ள அந்த சிறிய மஸ்ஜித் கூட போதாமலிருக்கிறது.
80களில் ஐ.தே.க. ஆட்சிக்காலத்தில் சகல இனங்களுக்கும் மத வணக்கஸ்தலங்களை கட்டுவதற்கு அப்போதைய வீடமைப்பு அமைச்சராக இருந்த முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ அவர்களால் நிலங்கள் வழங்கப்பட்டன.
அந்த நிலங்களில் கோவில், கிறிஸ்தவ ஆலயம், பௌத்த விகாரை என்பன அமைக்கப்பட்டன. ஆனால் பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்ட காணியில் பள்ளிவாசல் கட்டப்படாமல் எம்.எச். முஹம்மத் அவர்களால் இஸ்லாமிய நிலையம் அமைக்கப்பட்டது.
மாளிகாவத்தை வீடமைப்புத் திட்டத்தில் ஒழுங்கான வசதியான பள்ளிவாசல் இல்லாத குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும். தற்போது சட்டவிரோத நிலத்தில் கட்டப்பட்டுள்ள சிறியளவிலான தொழுகை அறையை மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்திற்க மாற்றி அதை ஒரு சிறந்த மஸ்ஜிதாக மாற்ற நடவடிக்கையை முஸ்லிம் அரசியல் தலைமைகள் மேற்கொள்ள முன்வர வேண்டும். எம்.எச். முஹம்மதின் மறைவிற்குப் பின்னர் அது குடும்ப சொத்தாக மாறும் நிலை ஏற்படாமலிருக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அஸ்ஸெய்க்  ஐ.என்.எம். மிப்லால்
தலைவர்,
ஐக்கிய சமாதான முன்னணி

Post a Comment

1 Comments

  1. நீங்கள் குறிப்பிடும் விடயம் உண்மையாக இருந்தால் உங்கள் கருத்தை வரவேற்கின்றோம்.

    ReplyDelete