Ticker

6/recent/ticker-posts

'ஜிஹாதி ஜோன்' கொல்லப்பட்டார்?

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் வெளியிடும் கொலை செய்யும் காணொளிகளில் அடிக்கடி தோன்றி பிரபல்யம் அடைந்தவரும் , தேடப்பட்டுபவந்தவருமான 'ஜிஹாதி ஜோன்' கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க வான் தாக்குதலிலேயே அவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளின் பிணைக்கைதிகளை கழுத்து வெட்டி கொலை செய்து வந்த அவர் பல்வேறு அமைப்புகளால் தேடப்பட்டு வந்தார்.
'ஜிஹாதி ஜோன்' என அறியப்பட்ட அவரது நிஜப் பெயர் மொஹமட் எம்வாசி என தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானிய பிரஜையான அவர் சிரியாவின் , ரக்காவில் வைத்து வாகனமொன்றில் ஏறும் போது அவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
அவரை இலக்குவைத்து இத்தாக்குதலை நடத்தியதாக பென்டகன் தெரிவித்துள்ளதுடன் தாக்குதலில் அவர் எவ்வித தவறுகளும் இன்றி கொல்லப்பட்ட தாக சுட்டிக்காட்டியுள்ளது.

Post a Comment

0 Comments